Advertisment

சென்னையில் 2 நாட்களில் 2 மருத்துவர்கள் மரணம்; பணிச்சுமை காரணமா? அமைச்சர் மா.சு விசாரணைக்கு உத்தரவு

சென்னையில் 2 நாட்களில் 2 மருத்துவர்களின் மரணத்துக்கு 24 மணி நேர வேலை, பணிச்சுமை காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

author-image
WebDesk
New Update
doctor death Ma Su

2 மருத்துவர்களின் மரணத்துக்கு பணிச்சுமை காரணமா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விசாரணைக்கு உத்தரவு

சென்னையில் 2 நாட்களில் 2 மருத்துவர்களின் மரணத்துக்கு 24 மணி நேர வேலை, பணிச்சுமை காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

Advertisment

இரண்டு நாட்களுக்குள், இரண்டு மருத்துவர்கள் தங்கள் பணி நேரத்தை முடித்த சிறிது நேரத்திலேயே சென்னையில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலைப் பட்டதாரி டாக்டர் மருதுபாண்டியன் டிசம்பர் 10-ம் தேதி அவரது இல்லத்திலும், அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சோலைசாமி டிசம்பர் 11-ம் தேதி பணியிலிருந்து திரும்பியபோது இறந்து கிடந்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் சங்கத்தினர் விசாரித்தனர். கடுமையான பணிச்சுமை மற்றும் அரசாங்கத்தின் கடுமையான உழைப்புச் சுரண்டல் குறித்து கேள்வி எழுப்பினர்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் (DASE) வெளியிட்ட அறிக்கையை டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையில்,  “டாக்டர் மருதுபாண்டியன், 30 வயதான இளம் மருத்துவர், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையில் முதுகலை பட்டதாரி ஆவார். அவர் தனது அறையில் இறந்து கிடந்தார். இவருக்கு அதிக பணிச்சுமை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணத்தை ஆராய நேர்மையான விசாரணையும் பிரேத பரிசோதனையும் செய்யப்பட வேண்டும்.  அதிக பணிச்சுமையால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சல் பல இளம் மருத்துவர்களின் உயிரைப் பறிக்கிறது. கடுமையான உழைப்புச் சுரண்டலைத் தடுக்கவும், மருத்துவ மாணவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டாக்டர் மருதுபாண்டியன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 மருத்துவர்களின் மரணத்திற்கு 24 மணி நேர வேலை மற்றும் பணிச்சுமை காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

ஊடகங்களின் செய்திகளுக்கு மாறாக, உயிரிழந்த மருத்துவர் 36 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றவில்லை என்று சென்னை மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. அவரது மரணம் பணிச்சுமையால் ஏற்பட்டதாகக் கூறுவது பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் மட்டுமே சரியான காரணத்தை கண்டறிய முடியும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உயிரிழந்த மருத்துவர் டிசம்பர் 8-ம் தேதி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த நபரின் உறுப்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவரின் மரணம் குறித்து, குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) பிரிவு 174-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment