Advertisment

மெர்சல் - பாஜக பிரச்னை : சமூக வலைதளங்களில் களைகட்டும் மீம்ஸ்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையைவிட தமிழிசையால் தான் ‘மெர்சல்’ படத்துக்கு மிகப்பெரிய பேக்ரவுண்டு ஸ்கோர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
mersal, vijay, title issue, mersalayitten

‘மெர்சல்’ படத்துக்கு எதிராக பாஜக குரல் கொடுத்த விஷயம், சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் ஆகிவிட்டது.

Advertisment

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு விஷயம் தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன். ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குரல் கொடுத்தனர். இந்த விஷயம், இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாகிவிட்டது.

‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளரான தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனத்தின் முரளி ராமசாமி, பாஜக சொன்ன காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டதாக நேற்று செய்தி வெளியானது. இதனால், ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்த விஷயம் குறித்து ஏகப்பட்ட கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதில், சிலவற்றைப் பார்ப்போம்.

* ஏ.ஆர்.ரஹ்மான் இசையைவிட தமிழிசையால் தான் ‘மெர்சல்’ படத்துக்கு மிகப்பெரிய பேக்ரவுண்டு ஸ்கோர்.

* அதிமுகவுக்கு இட்லியால் பிரச்னை, பாஜகவுக்கு அட்லீயால் பிரச்னை.

* மக்கள் நலனுக்கான படம் என்றால், எதற்காக டிக்கெட் கட்டணம்? - தமிழிசை. மக்களுக்கான சாலை எனில் எதற்காக சுங்க கட்டணம்? என வடிவேலு மோடியிடம் கேள்வி கேட்பதாக மீம்ஸ் க்ரியேட் செய்துள்ளனர்.

* ஜோசஃப் விஜய்தான் உங்களுக்குப் பிரச்னை என்றால், இனி விஜய்யைவிட ஜோசஃப் விஜய்க்கு 100 மடங்கு துணை நிற்போம்.

* ஒரு படத்தை இந்தியா லெவல்ல புரமோட் பண்ணணுமா? எங்க திட்டத்தைப் பத்தி ஒரு சீன்ல கழுவி ஊத்துங்க. அது போதும், நாங்க இருக்கோம் என வாசன் ஐ கேர் விளம்பரத்தில் தமிழிசை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் முகத்தை எடிட் செய்துள்ளனர்.

* இந்திய அளவில் டிரெண்ட் ஆன மெர்சல் - செய்தி. நாம படத்தை எதிர்க்கிறோமா இல்லை பப்ளிசிட்டி பண்றோமா? என சந்தானம் படத்தைப் போட்டு பாஜகவினர் கேட்பதாக மீம்ஸ் வெளியாகியுள்ளது.

* நீக்கப்பட வேண்டியது காட்சிகள் இல்லை, ஆட்சிகள்.

* படம் எடுத்து, சென்சார் போர்டு சர்ட்டிஃபிகேட் கொடுத்து படம் ரிலீஸான பிறகு உங்களுக்குப் பிடிக்கலைன்னா காட்சியை நீக்கச் சொல்றீங்களே... நாங்க ஓட்டு போட்டு ஜெயிக்கவச்ச உங்களைப் பிடிக்கலைன்னா நாங்க நீக்கலாமா?

இதுபோன்று பல்வேறு கமெண்ட்கள் மற்றும் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களைக் கலக்கி வருகின்றன.

Tamil Cinema Bjp Actor Vijay Mersal Movie Social Media Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment