Advertisment

குரங்கணி காட்டுத்தீ விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

4 நண்பர்கள் கூட்டமாக சென்ற இவர்கள் அனைவரும் தீயிக்கு இறையாகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குரங்கணி  காட்டுத்தீ விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

குரங்கணி மலைத் தீ சோகம், தமிழ்நாட்டையே உலுக்கியது.  தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள ஒரு மலைப் பகுதி கிராமம். இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் ‘டாப் ஸ்டேஷன்’ என்கிற இடம் இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம் இது!குரங்கணி வரை சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் போகலாம். அங்கிருந்து கடினமான மலைப் பாதையில் நடந்தே டாப் ஸ்டேஷன் செல்ல வேண்டும். சுற்றுலாவுக்கு மட்டுமல்லாமல், மலையேற்றப் பயிற்சிக்காகவும் ஆர்வமுள்ளவர்கள் இங்கு வருவார்கள்.

இந்த இயற்கை அழகை ரசிக்க தான் கடந்த வாரம் சென்னை மற்றும் ஈரோட்டில் இருந்து மொத்தம் 36 பேர் கொண்ட குழு இந்த பகுதிக்கு சென்றிருந்தது. கடந்த சனிக்கிழமை (10.3.18) மதியம் உணவுக்கு எல்லோரும் ஒன்றாக இணைந்த போது தான் காட்டுத் தீ பரவி வருகிறது என்ற தகவலே  தெரிந்துள்ளது.

கணவன் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் செய்வதறியாமல் தெறித்து ஓட ஆரம்பித்தனர். ஆனால், இயற்கை பேரழிவை யாரால் கட்டுப்படுத்த முடியும் , 9 பேர் அந்த கணமே  பரிதாபமாக  தீயிக்கு இறையாகினர்.

மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்றது.  ராணுவ விமானங்கள வரவழைக்கப்பட்டன. அதுமட்டுமில்லாம், குரங்கணி மலைப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களும்  மீட்டுப் குழுவினருடன் இணைந்து  பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

பலத்த தீக்காயங்களுடன் மீட்டக்கப்பட்டவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் உயிருக்கு போராடி வந்த ஈரோட்டைச் சேர்ந்த புதுப்பெண் திவ்யா, கோவைச் சேர்ந்த திவ்யா, சென்னையைச் சேர்ந்த நிஷா என மூன்று பெண்களும் அடுத்தத்து இறந்து போனார்கள். இதனால்  குரங்கணி காட்டுத் தீயின் பலி எண்னிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், நேற்றயை தினம், மதுரை அரசு மருத்துவமனையில் 70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த சென்னை ஆசிரியர் அனுவித்யா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞரும்  சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

உயிரிழந்த கண்ணன், புதுமண தம்பிகளாக சென்ற ஈரோட்டைச் சேர்ந்த விவேக்- திவ்யாவின் நண்பர் ஆவர்.   காட்டுத்தீ சூழந்த போது முதலில் கண்ணன் தப்பித்து வெளியேறியுள்ளார். ஆனால், தன்னுடன் வந்த நண்பர்களான திவ்யா,விவேக், தமிழ்செல்வன் உயிரை காப்பாற்றவே கண்ணன் மீண்டும் காட்டுக்குள சென்றுள்ளார்.  4 நண்பர்கள் கூட்டமாக சென்ற இவர்கள் அனைவரும் தீயிக்கு இறையாகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

publive-image

இதனால் பலி எண்ணிக்கை  காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை  14 ஆக இருந்தது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சக்தி கலா என்பவரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்பவரும் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளனர்

இதனையடுத்து , குரங்கணி காட்டுத்தீ  விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது,  16 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment