திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; திருச்சி மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களில் ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி ரயில்களின் நேரம் மாற்றம், பகுதி வாரியாக ரத்து போன்ற மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வண்டி எண் : 06888 காரைக்குடி - திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடியில் இருந்து காலை 9:40 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை இயங்கும் இந்த ரயில் குமாரமங்கலம் திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த மாற்றம் வருகிற 7, 14, 21 மற்றும் 28-ம் தேதிகளில் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“