Advertisment

"விடாது" கமல்! ரசிகர் மன்றங்களுக்கு கமலின் புதிய உத்தரவு: கலக்கத்தில் அரசு!

ஊழல் ஆதாரங்களை அனுப்ப முடியாமல் பொதுமக்கள் திணறினர். இதையடுத்து, கமல் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
"விடாது" கமல்! ரசிகர் மன்றங்களுக்கு கமலின் புதிய உத்தரவு: கலக்கத்தில் அரசு!

'பிக்பாஸ்' சர்ச்சை விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்க வந்த கமல், அந்த நிகழ்வின் போது அரசியல் குறித்து பேச, பிக்பாஸ் சர்ச்சை மறைந்து, தற்போது அது வேறொரு தளத்திற்கு சென்றுவிட்டது.

Advertisment

அந்த பத்த்ரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கின்றது என கமல் தெரிவிக்க, தினம் தினம் அமைச்சர்கள் கமலை வறுத்தெடுத்து வருகின்றனர். மிரட்டல் தொனியிலும் அமைச்சர்களின் பேச்சு இருந்தது. ஆனால், கமல் எதற்கும் அஞ்சுவது போல் தெரியவில்லை.

ஊழல் இருந்தால் ஆதாரத்துடன் கமல் நிரூபிக்க வேண்டும். இல்லையேல், அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தமிழக அமைச்சர்கள் எச்சரித்தனர்.

ஆதாரம் தானே, இதோ...என்ற மோடில் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார் கமல். அதில், "அமைச்சர் கேட்ட ஆதாரங்களையும், ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் இணையதளத்தில் அல்லது உங்கள் வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்" என தன் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் கமல் வேண்டுகோள் வைத்தார்.

அதோடுமட்டுமில்லாமல், ஊழல் ஆதாரங்களை இந்த முகவரிக்கு அனுப்புங்கள் என http://www.tn.gov.in/ministerslist அமைச்சர்களை தொடர்புக் கொள்ளக் கூடிய மின் முகவரியையும் அவர் தெரிவித்தார்.

கமலின் இந்த அறிக்கையை அடுத்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் மாயமாகின. அரசு இணையதள பக்கத்தில் அவர்கள் வகிக்கும் துறை சம்பந்தப்பட்ட தகவல் மட்டுமே உள்ளது. துறை ரீதியாக அமைச்சர்களின் தனித்தனி விவர குறிப்புகளிலும் அவர்களின் முகவரி, இ-மெயில் விவரம், தொலைபேசி எண், சொந்த ஊர், சென்னை முகவரி போன்ற தொடர்பு விவரங்கள் இல்லை.

இதனால், ஊழல் ஆதாரங்களை அனுப்ப முடியாமல் பொதுமக்கள் திணறினர். இதையடுத்து, கமல் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர்களின் முகவரிக்கு பதிலாக ஊழல் புகார் ஆதாரங்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று கமல் அறிவுறுத்தி உள்ளார்.

அத்துடன் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகம் இயங்கும் எண்.293, எம்.கே.என்.ரோடு, ஆலந்தூர், சென்னை-600016 என்ற முகவரியையும், 22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள், 22321005 என்ற பேக்ஸ் எண், dv-ac@nic.in என்ற இமெயில் முகவரி ஆகியவற்றையும் அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினருக்கும் அனுப்பி வைத்து உள்ளார். இந்த முகவரிக்கு ரசிகர்கள் ஊழல் புகார் ஆதாரங்களை தற்போது அனுப்பி வருகிறார்கள்.

கமலின் இந்த தொடர் நடவடிக்கைகளால், சில அமைச்சர்கள் தூக்கம் இழந்திருப்பது மட்டும் உண்மை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment