Advertisment

கமல்ஹாசன் கட்சி தொடங்கும் நிகழ்வு : இந்திய அளவில் டிரெண்டானது!

கமல்ஹாசன் இன்று கட்சி தொடங்கும் நிகழ்வு, இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan new party

கமல்ஹாசன் இன்று கட்சி தொடங்கும் நிகழ்வு, இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது.

Advertisment

ட்விட்டரில் மட்டுமே அரசியல் பேசிவந்த கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இன்று தன்னுடைய கட்சியின் பெயர், கொடியை அறிமுகப்படுத்த இருக்கும் கமல்ஹாசன், கட்சியின் கொள்கைகள் பற்றியும் விளக்க இருக்கிறார்.

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் கமல்ஹாசன், ராமநாதபுரம், பரமக்குடி, மானா மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசியபின், மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். இதற்காக மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கமல்ஹாசனை வரவேற்று நிறைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள இருக்கிறார்.மேலும், சில மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கமல்ஹாசன் கட்சி தொடங்கும் நிகழ்வு, இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாகியிருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment