Advertisment

தொழிலாளர்கள் கேட்பது தங்களின் சேமிப்புப் பணத்தைத்தான்... போராட்டத்திற்கு ஆதரவு: கி வீரமணி

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5,000 கோடி வேறு துறைகளுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
K Veeramani

இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்பட பிரச்சினை குறித்து, 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்பட வில்லை.

Advertisment

போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5,000 கோடி வேறு துறைகளுக்குச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக பணியாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள்கூட இத்தொகைகள் கிடைக்கப் பெறாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 12-வது ஊதிய ஒப்பந்த காலம் கடந்தாண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி முடிந்த நிலையில், 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் வேறு வழியின்றி பேருந்து வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொழிலாளர்கள் தங்களின் சேமிப்புப் பணத்தைத்தான் கேட்கிறார்கள். இதில் போய் கிழக்கு மேற்குப் பார்ப்பது அரசின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.

கொளுத்தும் கோடையில் பேருந்து போக்குவரத்து வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் அல்லலுக்கு ஆளாகும் நிலையை தவிர்த்திட, அரசுதான் உரிய முறையில் நல்லதோர் முடிவுக்கு வரவேண்டும்.

பேருந்து ஓடாமல் இருந்தால் ஏற்படும் நட்டத்தையும் ஒருபுறம் எண்ணிப் பார்த்து, பணியாளர்களுக்குக் நியாயப்படி, சட்டப்படி கிடைக்கவேண்டிய தொகையைக் கிடைக்க ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

தவிர்க்க இயலாத நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. ஏற்படும் அசவுகரியத்திற்குப் பொதுமக்கள் பொறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Strike K Veeramani Dravidar Kazhagam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment