Advertisment

தமிழக அரசு கேபிளில் பின்னுக்கு தள்ளப்பட்ட ஜெயா டி.வி.,

இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பின்னர், ஜெயா டிவி-யையும், நமது எம்ஜிஆர் நாளிதழையும் மீட்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் இயற்றினர்

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசு கேபிளில் பின்னுக்கு தள்ளப்பட்ட ஜெயா டி.வி.,

தமிழக அரசு கேபிளில் பிரைம் பேன்ட் எனப்படும் பிரதான அலைவரிசையில் இருந்து ஜெயா தொலைக்காட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள், கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் ஜெயா டிவி-யை முடக்கும் இந்த முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக ஜெயா டிவி தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisment

அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் ஆகும். பல்வேறு காரணங்களால் செயலிழந்து கிடந்த அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு புத்துயிரூட்டப்பட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச் சேவையை சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அதே ஆண்டும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவை கடந்த 2012-ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் 90 - 100 சேனல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு தற்போதைய நிலவரப்படி, சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவன சேவை அனலாக் முறையில் மேற்கொள்ளப்பட்டதால், தனியாருக்கு இணையாக துல்லியமான காட்சிகளை வழங்க முடியவில்லை. எனவே, அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. பல ஆண்டு நிலுவைக்கு பின்னர், கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, தற்போது பொதுமக்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு டிஜிட்டல் சேவை தொடங்கப்பட்டுளது.

சென்னையை நுங்கம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்ட தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், ஒவ்வொரு மாவட்டத்துக்கு டிசிஓ, தாலுகா அளவில் டீசிஓ எனப்படும் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, அவற்றை நிர்வகிக்கும் உரிமையை தனது ஏஜென்ட்டுகளுக்கு வழங்கியுள்ளது. இவர்கள் மூலமாக தான் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கேபிள் டி.வி., ஆப்பரேட்டர்களுக்கு சேனல்களை ஒளிபரப்பு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது. இதில், ஜெயா குழும சேனல்கள், பிரைம் பேன்ட் எனப்படும் பிரதான அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

இந்நிலையில், பிரைம் பேன்ட் எனப்படும் பிரதான அலைவரிசையில் இருந்து ஜெயா தொலைக்காட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், பல மாவட்டங்களில் ஜெயா குழும சேனல்கள் தெரிவதில்லை. அரசு உயர் அதிகாரிகள், கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் ஜெயா டிவி-யை முடக்கும் இந்த முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக ஜெயா டிவி தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னதாக, இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பின்னர், ஜெயா டிவி-யையும், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழையும் மீட்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது என்பது, இதற்கு ஜெயா டிவி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment