Advertisment

டிச.6 தமிழ்நாடு தழுவிய போராட்டம்: ஜவாஹிருல்லா

தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனரால் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட 10 முன்மொழிவுகள் மீண்டும் சட்டசபையில் முழு மனதோடு நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
thol.thirumavalavan, M.H.Jawahirullah, MMK, VCK, Hindu Temple, Buddhist vihara, babri masjid demolition

டிசம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்

m-h-jawahirullah | டிசம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்தப்படும் என நாகர்கோவிலில் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட முன் மொழிவுகளை இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போட்டுள்ளதற்கு காரணம் என்ன? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதன் மூலம் ஆர். என். ரவி ஆளுநர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்பதை காட்டுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.

Advertisment

தொடர்ந்து, “இந்தியா சுதந்திரம் அடையும் முன், தமிழகத்தில் எந்தெந்த இடங்களில்  கோயில்கள், மசூதிகள் இருந்ததோ அதே இடங்களில் தொடர்ந்து தொடரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், தமிழகம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

மேலும் இந்தப் போராட்டம் டிச.6ஆம் தேதி நடத்தப்படும் என்றார். இதையடுத்து, “மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

M H Jawahirullah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment