ஆளுநர் ஆலோசனை நடத்துவது ஆரோக்கியமானது... அரசு நிர்வாகத்தில் தலையீடு இல்லை: அமைச்சர் வேலுமணி

அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடவில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசின் நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்று கூறுவது தவறானது என ஆளுநரை சந்தித்த பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அமைச்சர்கள் யாருக்கும் அழைப்பு இல்லாமல், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசு அதிகாரிகளுடன் 2 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை நிறைவடைந்த பின்னர், அமைச்சர் வேலுமணி ஆளுநரை சந்தித்தார். இதன் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது: ஆளுநர் கோவைக்கு வந்துள்ள நிலையில், அவரை சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பேசினோம். அரசு அதிகாரிகளை ஆளுநர் சந்திப்பது ஆரோக்கியமான விஷயமானது தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரேகித் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்று கூறுவது தறவானது என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

×Close
×Close