Advertisment

என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு தான் புரியும்: ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த்

ரேசன் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்தியதை எதிர்த்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு தான் புரியும்: ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த்

நியாயவிலை கடையில் சர்க்கரை விலை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதில் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் , சுதிஷ் உட்பட 500க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றுள்ளனர்.

முதலில் பேசிய பிரேமாலதா விஜயகாந்த், "முதலமைச்சர் அனுமதியில்லாமல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடந்திருக்காது. வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே. தமிழகத்தில் உள்ள பழமையான அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கின்றனர்" என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய விஜயகாந்த், என் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு தான் புரியும். ஈபிஎஸ் போன்றவர்களுக்கு புரியாது என்றார். மேலும், தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது சந்தோஷம் அளிக்கிறது. ஆனால், மாநில சுயாட்சி எங்குள்ளது? ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா? என விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, "போக்குவரத்துக்கழக சொத்துகளை அடமானம் வைத்து தமிழகத்தை ஓட்டாண்டி ஆக்கிவிட்டனர். ஆளுநர் ஆய்வு செய்வது தவறாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை நடந்தால் சரி. முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நல்ல நடிகர்கள்" என விஜயகாந்த் பேசினார்.

More Details Awaited...

Vijayakanth Dmdk Premalatha Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment