”டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ரூ.256 கோடி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை”: அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு ரூ.256 கோடி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு ரூ.256 கோடி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கோள்வதற்காக, 5 பேர் அடங்கிய மத்திய அரசின் மருத்துவ குழுவினர் வெள்ளிக்கிழமை சென்னை வந்தனர். இக்குழுவினர் முதாலவதாக சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில்,டெங்கு நிலவரம், அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அதிகாரிகள், மத்திய குழுவினர் விளக்கினர்.

இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், “மத்திய குழுவினர் முதலாவதாக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஏதேனும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்பின், மற்றம் மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. 2-3 நாட்கள் மத்திய அரசு குழுவினர் தமிழகத்தில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் சில நாட்கள் இருப்பார்கள். கூடுதல் செவிலியர்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்காக தமிழக அரசுக்கு 256 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்”, என கூறினார்.

இதையடுத்து, மத்திய குழுவை சேர்ந்த அசுதோஷ் பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழகத்தில் 12,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டியுள்ளது. டெங்கு பாதிப்புக்கு அரசை மட்டுமே காரணம் கூற முடியாது. மக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தண்ணீரை தேக்கிவைக்கும் பழக்கமே டெங்கு கொசு புழுக்கள் வளர காரணமாகும். அதனால், தண்ணீரை தேங்கவிடக்கூடாது. காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவமனை சென்று மருத்துவரின் அறிவுரைக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்படைய தேவையில்லை. இந்த காய்ச்சலால் உயிரிழப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதனை ஆய்வு செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு நிதி பற்றாக்குறை இருந்தால் அதுகுறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்”, என கூறினார்.

×Close
×Close