Advertisment

தந்தை போட்ட உத்தரவு, தனையன் தட்டி பறித்தது நியாமா? கிராம உதவியாளர் சங்க பேனரால் பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

author-image
WebDesk
New Update
baner covai 1

தந்தை போட்ட உத்தரவு, தனையன் தட்டி பறித்தது நியாமா? கிராம உதவியாளர் சங்க பேனரால் பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பாக பிளாக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், நீதி கேட்கும் போராட்டம், தந்தை போட்ட உத்தரவை தனையன் தட்டி பறித்தது நியாயம் தானா?

Advertisment

பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் எவரேனும் இறந்து விட்டால் அதன் பிறகு அந்த குடும்பம் வாழ வழி தெரியாமல் தவிக்குமே என்பதை புரிந்து கொண்டு 1999 ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வாரிசுக்கு வேலை வழங்கினார்கள். ஆனால், அந்த உத்தரவு கடந்த 08 - 03 - 2023 அன்று கருணையே இல்லாமல் நிறுத்தப்பட்டது நியாயமா?

மேலும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் கிராம உதவியாளர்கள் பெற்று வந்த எரிபொருள் படி ரூபாய் 2500-ஐ கருணையே காட்டாமல் நிறுத்தியது நியாயம் தானா?

baner covai 11

01-01-2009-க்குபிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கின்ற போது அதை நிறைவேற்றி கொடுக்கப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, சி.பி.எஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்துவது நியாயம் தானா?

என்பது போன்ற  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் 23-11-2023 அன்று முதல்வரின் கவனத்தை ஈர்க்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாலை 5:45 மணி அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் 7-12-2023 அன்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. கலைஞர் வெளியிட்ட அறிவிப்பை தற்போதைய முதலமைச்சர் நிறுத்திய குறித்து வைக்கப்பட்டுள்ள இந்த பிளக்ஸ் பேனரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment