Advertisment

 விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார் ? ஆம்! வறட்சி மட்டும் காரணமல்ல!

உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு வழங்கியுள்ள பதில் மக்களின் அதிர்ச்சியையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார் ? ஆம்! வறட்சி மட்டும் காரணமல்ல!

கோபாலகிருஷ்ணன்

Advertisment

விவசாயிகள் தற்கொலை பிரச்சனை பற்றிய உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு வழங்கியுள்ள பதில் மக்களின் அதிர்ச்சியையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.

வறட்சி மட்டும் காரணமல்ல!

ஒரு அரசுசாரா நிறுவனம் தொடர்ந்திருந்த வழக்கில், தொடர் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை குறித்து வருத்தம் தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம், இந்தத் தற்கொலைகளைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விவரித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28, 2017) அன்று தமிழக அரசு தனது பதிலைத் தாக்கல் செய்தது.

அதில் விவசாயிகள் சொந்தக் காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வதாகவும் எந்த ஒரு விவசாயியின் தற்கொலைக்கும் வறட்சி காரணமல்ல என்றும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் அனைவரும் சொந்த காரணங்களால்தான் அந்த முடிவை எடுத்தனர் என்றும் சொல்லியுள்ளது. தமிழக அரசின் இந்த பதில் மாநிலமெங்கும் அதிர்ச்சியையும் கோபத்தையும் கிளறியுள்ளது.

கவனிக்கத்தக்க முரண்

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணத் தொகையை அறிவித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் மாநிலத்தில் 87% விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது ஒரு விவசாயிகூட வறட்சியால் வாழ்வாதாரத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு பாதிக்கப்படவில்லை என்று சொல்வதில் உள்ள முரணைக்கூட இந்தப் பதிலை தயார் செய்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை போலும்.

நன்மை செய்த உயர்நீதிமன்றம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஐயாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தமிழகத்தில் வறட்சியால் அனைத்து விவசாயிகளும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதனால் அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று முறையிட்டிருந்தார்.

publive-image

இந்த வழக்கில் இந்த மாதம் ஐந்தாம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், தமிழகத்தின் அனைத்து விவசாயிகள் பெற்ற கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் வங்கிகள் கடனைத் திருப்பி செலுத்தாத விவசாயிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் தமிழகத்தின் நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு,. மத்திய அரசும் விவசாயிகள் கடன் ரத்துக்கு தேவையான நிதியுதவியைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

முதலமைச்சரின் வாக்குறுதி

இதே ஐயாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் 42 நாட்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினர். தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி பிரதமரிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்த பிறகே விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டனர்.

இந்தச் சுழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை குறித்து தமிழக அரசு இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலைத் தந்திருப்பது, முதல்வர் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எந்த அளவு மனவுறுதியுடன் இருப்பார் என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.

ஒரு விதத்தில் சரிதான்

ஓரு விதத்தில் அரசு சொல்வதும் சரிதான்.விவசாயிகள் வறட்சி என்ற இயற்கை விளைவால் சாகவில்லை. ஒருபக்கம் விவசாயிகளைப் பற்றி உணர்ச்சிபொங்கப் பேசிக்கொண்டே அவர்களை வறட்சி சூழலில் இதுபோல் தவிக்கவிடும் அரசுகள், வறட்சி ஏற்பட்டால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கை உணர்வற்ற திட்டமிடல், வறட்சிச் சூழலை விளைவிக்கும் பல்வேறு சமூகக் காரணிகள், பலநூறுகோடி கடன் வாங்கி ஏமாற்றிய பெருமுதலாளிகளை விட்டுவிட்டு கையறுநிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட விவசாயிகளை இழிவுபடுத்தி மிரட்டி வட்டியைக் கறக்க முயலும் வங்கி, நிதி நிறுவனங்கள் என பல்வேறு செயற்கைக் காரணங்களால்தான் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அனைத்து மரணங்களுக்கும் இதே பதில்

விவசாயிகள் தற்கொலை மட்டுமல்லாமல் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் சாதி ஆணவக் கொலைகளையும் தமிழகத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிமுக, மறுத்தே வந்துள்ளது என்பதை இத்துடன் பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்தக் கொலைகள் அனைத்தும் தனிப்பட்ட மோதல் கொலைகள் என்றுதான் அதிமுகவினர் கூறிவந்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment