Advertisment

சேலம் விமான நிலையத்துக்கு பெயர் வைப்பதில் தி.மு.க - பா.ஜ.க இடையே கடும் மோதல்

சேலம் விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க விரும்புகிறது. ஆனால், பா.ஜ.க, சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Salem Airport

சேலம் விமான நிலையத்துக்கு பெயர் வைப்பதில் தி.மு.க - பா.ஜ.க இடையே கடும் மோதல்

சேலம் விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க விரும்புகிறது.ஆனால், பா.ஜ.க, சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Advertisment

சேலம் விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது தொடர்பாக பா.ஜ.க-வும் தி.மு.க-வும் முரண்பட்டுள்ளன. சேலம் விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என தி.மு.க விரும்புகிறது. ஆனால், சுதந்திர போராட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சேலம் விமான நிலையத்துக்கு சுப்பிரமணிய சிவா விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

சேலம் விமான நிலையம் 1993-ல் கட்டப்பட்டது. 136 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் முதலில் சென்னை-சேலம்-கோவை இடையே விமானங்கள் இயக்கப்பட்டன. மூன்று மாதங்களுக்குள், மோசமான ஆதரவு காரணமாக சேவை நிறுத்தப்பட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2009 நவம்பரில் சேலத்திற்கும் சென்னைக்கும் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டாலும், அது மீண்டும் 2011-ல் நிறுத்தப்பட்டது. உடான் திட்டத்தின் கீழ், விமான சேவை 2018-ல் மீண்டும் தொடங்கியது. ஆனால், கோவிட்-19 க்குப் பிறகு, மீண்டும் ஜூன் 2021-ல் நிறுத்தப்பட்டது.

இப்போது, உடான் 5.0 திட்டத்தின் கீழ், அக்டோபர் 16, 2023 அன்று சேலம் விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் விமான நிலையத்தின் ஆறாவது விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம், சேலம் எம்.பி எஸ்.ஆர். பார்த்திபன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சேலம் விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பெயரை சூட்ட விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சேலம் விமான நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பெயரை சூட்ட வேண்டும் என்று பா.ஜ.க மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.பி. கோபிநாத் தெரிவித்துள்ளார். 

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தாலும், ஆங்கிலேய அரசால் பல ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையாகி ஓமலூரில் சில மாதங்கள் தங்கிய அவர், தனது வாழ்நாளின் இறுதியில் தருமபுரி மாவட்டத்தில் (முன்னாள் சேலம் மாவட்டம்) வாழ்ந்து 1925-ம் ஆண்டு மரணமடைந்தார். எனவே, சேலம் விமான நிலையத்துக்கு அவர் பெயரைச் சூட்டுவது மிகப்பெரிய அஞ்சலியாக இருக்கும். “2018-ம் ஆண்டிலேயே, இது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையத்திடம் நாங்கள் மனு அளித்தோம். விரைவில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவைச் சந்திப்போம்,” என்று கோபிநாத் மேலும் கூறினார்.

சேலம் எம்பி எஸ்.ஆர். பார்த்திபன் 1970-களில் சேலத்திற்கு காவிரி நீரை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, அவர் சேலம் உருக்காலை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சேலம் ரயில்வே கோட்டத்தையும் கொண்டு வந்தார் என்றார் பார்த்திபன். சேலத்தின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம். அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வேளையில், விமான நிலையத்துக்கு முன்னாள் முதல்வரின் பெயரை சூட்ட இதுவே சரியான தருணம். விரைவில் இந்த தீர்மானத்துடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சரையும் சந்திக்க உள்ளோம்” என்று எஸ்.ஆர். பார்த்திபன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Salem Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment