Advertisment

ஜெயலலிதா, அப்பல்லோவில் நுழைந்த நாள் : நினைவில் நிற்கும் பொங்கல், சாண்ட்விச், உப்புமா பேட்டிகள்

அவர்களுள் ஷீலா, சாமுண்டீஸ்வரி, ரேணுகா ஆகியோர் ஜெயலலிதாவின் மனதில் தனி இடத்தைப் பிடித்ததாக அவர்களே அந்த இரங்கல் கூட்டத்தில் கூறிக்கொண்டனர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Did Jayalalitha ate Pongal, Upma, Sandwitch in Apollo?

கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி ஆரம்பித்த பரபரப்பான தமிழகம், தற்போது வரை அமைதியான சூழலுக்கு திரும்பவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றைய தினம் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் ‘சாதாரண காய்ச்சல்’ என்று அனுமதிக்கப்பட்ட தினம். அன்றைய தினம் அப்பல்லோவுக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு தெரியாது, இனிவரும் காலம் முழுதும் நாம் பரபரப்பாகவே எப்போதும் இயங்கவிருக்கின்றோம் என.

Advertisment

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்கள் முழுவதும் ஒவ்வொரு ‘வதந்திகள்’ வெளிவந்து கொண்டே இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறிக்கைகளை ‘அப்பல்லோ’ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுக் கொண்டிருந்தன. சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, என தொடங்கி, மெல்ல மெல்ல நீரிழிவு நோய், நோய்த்தொற்று எனத்தீவிரமாக நகர்ந்து, கவலைக்கிடம், மிகவும் கவலைக்கிடம் என ஒவ்வொன்றாக கட்டவிழ்த்து, ஜெயலலிதாவின் மரணச்செய்தியை கட்டவிழ்த்தது அப்பல்லோ.

அவரது மரணத்திற்கு பின் அப்பல்லோ நிர்வாகம் பேச துவங்கியிருந்தது. “நாங்கள் சிறப்பான சிகிச்சை அளித்தோம்”, ‘சிகிச்சை குறித்து அறிக்கை அளிக்கத் தயார்”, என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறிவந்தன. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் ஒருமுறை சென்னை வந்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள் மட்டும் தான் இன்று வரை ஜெயலலிதாவின் மரணத்திற்கான சான்றுகளாக மிஞ்சியிருக்கின்றன. அப்படிப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்தினர்.

அப்போது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே அந்த இரங்கல் கூட்டத்தில் பேசினர். ஜெயலலிதாவுக்கு 15 செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் ஷீலா, சாமுண்டீஸ்வரி, ரேணுகா ஆகியோர் ஜெயலலிதாவின் மனதில் தனி இடத்தைப் பிடித்ததாக அவர்களே அந்த இரங்கல் கூட்டத்தில் கூறிக்கொண்டனர்.

மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட ஜெயலலிதா மிகவும் சிரமமடைந்ததாகவும் அவர்கள் கூறினர். மூன்று நர்சுகளையும் ‘கிங்காங்’ என செல்லமாக அழைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு கொடுத்த காபி ”நன்றாக இல்லை” என ஜெயலலிதா கூறியதாகவும், “போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்தால் கொடநாடு தேயிலை மூலம் டீ தயாரித்து தருகிறேன்”, என ஜெயலலிதா கூறியதாகவும், அந்த செவிலியர்கள் இரங்கல் கூட்டத்தில் வருந்தினர். அவர்களுக்கு ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் சிகையலங்கார குறிப்புகளும் வழங்கினாராம்! உப்புமா, பொங்கல், சாண்ட்விட்ச் ஆகியவற்றை விரும்பி சாப்பிட்டாராம் ஜெயலலிதா!

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு பொங்கல், உப்புமா, சாண்ட்விட்ச் ஆகியவை அப்பல்லோ மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, அந்த இரங்கல் கூட்டத்தில் செவிலியர்கள் ‘வருத்தத்துடன்’ சொன்னதை நம்புவோமாக!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment