டெங்கு காய்ச்சல்: கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரேமலதாவிற்கு அனுமதி மறுப்பு?

டெங்கு காய்ச்சலால் : கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரேமலதாவிற்கு, அனுமதி மறுக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தே.மு.தி.க. சார்பில் உதவிகள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரேமலதாவிற்கு, அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர், 4 நிர்வாகிகளுடன் சென்று நோயாளிகளை சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், பதவிகளை தக்கவைத்துக் கொள்ள கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள், டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவதை பற்றி கவலை கொள்வதில்லை என விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் களப்பணில் தேமுதிக ஈடுபடும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேமுதிக சார்பில் உதவி செய்யப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.

அதன்படி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவர்களை சந்திப்பதற்காக பிரேமலாதா விஜயகாந்த் இன்று காலை(வியாழக்கிழமை)கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

பிரேமலதா விஜயகாந்த் வருகையையொட்டி அரசு மருத்துவமனை முன்பு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அதிகளவில் கூடியிருந்தனர். இந்த நிலையில், நோயாளிகளை பார்க்கவரும் பிரேமலதாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அசாக்குமார் உத்தரவிட்டிருந்தார் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக தேமுதிக-வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நோயாளிகளை சந்திப்பதற்கு முறைப்படி முன்னதாக கடிதம் கொடுத்து, அதற்கான அனுமதி பெற்ற நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்படுவது என்பது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் கூறினர்.

இதனிடையே, பிரேமலதா கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவரை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் அசோகன் சந்தித்து பேசினார். அப்போது, மருத்துவமனைக்கும் கூட்டமாக செல்லக் கூடாது என்றும், ஒரு சிலர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டாதாக தெரிகிறது.

இதனால். பிரேமலதா மற்றும் 4 நிர்வாகிகள் மட்டும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்தனர். அப்போது, நோயாளிகளிடம் நலம் விசாரித்த பிரேமலதா, ரொட்டி, பழம் உள்ளிட்டவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

இதன் பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது: ததிழகத்தில் தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததே, டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு முக்கியமான காணரம். பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். மர்மாக நடைபெற்று வரும் இந்த ஆட்சி விலைவில் கலைந்துவிடும் என்று கூறினார்.

×Close
×Close