Advertisment

சென்னை வெயிலை கட்டுப்படுத்த வார்னரின் இரு மகள்கள் கண்டறிந்த புது வழி!

வார்னரின் இரு மகள்களும், சாலையோரத்தில் ஒரு பெண் விற்றுக் கொண்டிருந்த லெமன் ஜூஸ் வேண்டும் என அடம்பிடித்து அதை வாங்கி அருந்தியுள்ளனர்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை வெயிலை கட்டுப்படுத்த வார்னரின் இரு மகள்கள் கண்டறிந்த புது வழி!

கடந்த 17-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. அப்போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Advertisment

இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். இதற்காக அவர் தனது மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். சென்னையில் நடந்த முதல் போட்டியின் போதும் வார்னர் தனது குடும்பத்துடன் ஹோட்டலில் தங்கிருந்தார்.

அதன்போது, சென்னையில் பல இடங்களை வார்னர் குடும்பம் சுற்றிப் பார்த்திருக்கிறது. வார்னரின் இரண்டு குட்டி மகள்களான ஐவி மே, இன்டி ரே ஆகியோர் சென்னையை வெகுவாக ரசித்திருக்கின்றனர்.

போட்டி நடந்த அன்று சென்னையில் வெயில் அவ்வளவாக இல்லை. அன்று மழை தான் ஆங்காங்கே பெய்துக் கொண்டிருந்தது. போட்டி கூட மழையால் பாதிக்கப்பட்டு, ஆட்டம் 21 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

ஆனால், அதன்பின் தினம் சென்னையில் பரவலாக வெயில் அடிக்கின்றது. இந்த நிலையில், போட்டி நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு, சென்னையை தனது குடும்பத்துடன் வார்னர் காரில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரது இரு மகள்களும், சாலையோரத்தில் ஒரு பெண் விற்றுக் கொண்டிருந்த லெமன் ஜூஸ் வேண்டும் என அடம்பிடித்து அதை வாங்கி அருந்தியுள்ளனர்.

இதை அப்படியே போட்டோ பிடித்த வார்னர் தனது இன்ஸ்டாகிராமில் அதனை பதிவு செய்துள்ளார். அதனுடன், "எனது இரு மகள்கும் சென்னையை மிகவும் ரசித்தனர். லெமன் ஜூஸ்-காக காரை நிறுத்தச் சொல்லி வாங்கிக் குடித்தனர்" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.

Both girls loving Chennai and also wanted to stop for a lemonade.

A post shared by David Warner (@davidwarner31) on

India Vs Australia David Warner
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment