Advertisment

கருத்தடை செய்த பெண்ணுக்கு குழந்தை... ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கருத்தடை செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

கருத்தடை செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் பாதிக்கப்பட்டவருக்கு 2.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சிக்கு  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை, கந்தன்சாவடி, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஏஞ்சல். இவர் கடந்த 2001-ம் ஆண்டு பிரவசத்துகாக சென்னை, மாநகராட்சின் கீழ் இயங்கிவரும் மகப்பேறு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது ஏஞ்சல் சுகபிரசவத்தில் 3வது குழந்தையை பெற்றுள்ளார்.

Advertisment

அதன்பின்னர் கருத்தடை செய்யுமாறு மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு 2 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மருத்துவர்களும் கருத்தடை செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு ஏஞ்சலுக்கு உடலில் சில மாற்றங்கள் தெரிந்துள்ளது. சந்தேகம் அடைந்த ஏஞ்சல் மருத்துவ சோதனை செய்துள்ளார். அதில் இவர் கருவுற்று இருப்பதாக தெரிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ஏஞ்சல் ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளன.

கூலி வேலை செய்து அவர்களை வைத்து குடும்பம் நடத்துவதே கஷ்டமாக உள்ளது. எனவே எனக்கு மேலும் ஒரு குழந்தை வேண்டாம் என்று கருவைகலைத்துவிட கோரி மருத்துவமனையை அனுகியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் முடியாது, அந்த நிலையை இப்போது தாண்டி விட்டது. கருவை கலைக்க முடியாது. அப்படி செய்தால் உங்கள் உடலுக்கு தான் ஆபத்து என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஏஞ்சல் குழந்தையை வளர்க்கவும், மன உளச்சல் ஏற்படுத்தியதற்காகவும். சிகிச்சை அளித்த மாநகராட்சி மகப்பேறு மையம் மற்றும் சென்னை மாநகராட்சியிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் வாங்கி தரும்படி, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மோனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த பெண்ணுக்கு செய்யப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வி அடைந்துள்ளது. இதற்கு சென்னை மாநகராட்சி மற்றும் சாந்தோமில் உள்ள மகப்பேறு மருத்துவமனை அதிகாரி ஆகியோர் தான் பொறுப்பு.

எனவே குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இணைந்து. குழந்தை வளர்ப்புக்கு மற்றும் மன உளச்சல் ஏற்படுத்தியதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இந்த பணத்தை குழந்தையின் பெயரில் செலுத்த வேண்டும். மேலும் வழக்கு செலவுக்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார். இவைகள் அனைத்தையும் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment