Advertisment

’ஸ்மார்ட் கார்டு’களில் தொடர் குளறுபடிகள்: இணையவழி திருத்த சேவை தற்காலிக நிறுத்தம்

ஸ்மார்ட் கார்டுகளில் பதியப்பட்ட புகைப்பட்ட படங்களில் ஏற்பட்ட குளறுபடிகளின் காரணமாக, இணைய வழி திருத்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
smart cards, family cards, tamilnadu government, e-service,

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் பதியப்பட்ட புகைப்பட்ட படங்களில் ஏற்பட்ட குளறுபடிகளின் காரணமாக, இணைய வழி திருத்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Advertisment

தமிழகத்தில், காகிதத்தால் ஆன குடும்ப அட்டைகள் கடந்த 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அவை 2010-ம் ஆண்டு புதுப்பித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போலி அட்டைகளை ஒழிப்பதற்கான கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி, அப்போது புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை.

அதன்பின்னர், 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு ரூ.700 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், அவை அறிவிப்புகளாகவே இருந்துவிட்டன. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்துக்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகும் பாதிக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆர்.சி.செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், அவரது மனைவி சரோஜாவின் புகைப்படத்திற்கு பதிலாக, திரைப்பட நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், திருப்பூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த நல்லசிவம் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக விநாயகரின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவமும் நடைபெற்றது.

இவ்வாறு, தங்கள் ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு பிழைகள் ஏற்பட்டவர்கள் டி.என்.இ.பி.டி.எஸ். இணையத்தளத்திலும், செல்பேசி செயலியிலும் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால், பொதுமக்கள் பலர் இ-சேவை மையங்களில் 50 ரூபாய் செலுத்தி திருத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி இரவு முதல் டி.என்.இ.பி.டி.எஸ். இணையத்தளம் திடீரென முடக்கி வைக்கப்பட்டது. இதனால், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் ஆகிய திருத்தங்களுக்காக, இ-சேவை மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து, செல்பெசி செயலி, இணையத்தளம் வழியாக பயனாளர்களே புகைப்படங்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், சிலர் தவறுதலாக படங்களை மாற்றி பதிவேற்றி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக வட்டார வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழறுபடிகளை தவிர்க்க டி.என்.இ.பி.டி.எஸ். இணையத்தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், வட்டார வழங்கல் துறை மூலமாகவே புகைப்பட திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை கூட்ட நெரிசலின்றி முறையாக நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தரப்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் வட்டார வழங்கல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய அறிவிப்பு வெளியான பிறகு, பணிகள் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment