Advertisment

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் அல்வா வாசு மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் அல்வா வாசு மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Advertisment

மதுரை ஹார்விபட்டியை சேர்ந்த அல்வா வாசு (57), எம்.காம் பட்டதாரி. சினிமா ஆசையில் சென்னை வந்த இவர், மறைந்த இயக்குனர், மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தவர். மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் "அமைதிப்படை". இப்படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன் மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் இவர்.

பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தாலும், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்தது அவரை மேலும் பிரபலமாக்கியது. சிறந்த கிடாரிஸ்ட், கதாசிரியர், துணை இயக்குனர், காமெடி நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட இவர், இதுவரை 900 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

வடிவேலு, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து திரையுலகில் பின் தள்ளப்பட்ட பின்னர், இவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. அத்துடன் உடல் நலக் கோளாறும் தொற்றிக் கொண்டது.

கடந்த ஆறு மாதங்களாக கல்லீரல் பாதிப்பால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல் நிலை மேலும் மோசமானது. இதையடுத்து, அவரது உயிர் விரைவில் பிரிந்து விடும். எனவே, அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதையடுத்து, அவரது இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் அல்வா வாசு காலமானார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment