Advertisment

ராணுவ அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு தொடர்பாக ராணுவ அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுரை வழங்கவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu government, cm edappadi palaniswami, pm narendra modi, tamilnadu fishermen, indian coast guard, indian defence ministry

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு தொடர்பாக ராணுவ அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுரை வழங்கவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 13-ம் தேதியன்று ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரப் படகு மூலமாக 6 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் எங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராணி அபாகா என்ற கப்பலில் வந்த இந்திய கடலோர காவல்படையினர், மீனவர்களின் படகுகளின் நிறுத்தச் சொல்லியுள்ளனர். இதைத் தொடர்ந்து மீன்பிடி படகு மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பிச்சை என்ற மீனவரின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு துப்பாக்கிக் குண்டும் மீனவர்களின் படகில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி குண்டானது, மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் தங்களது படகுக்கு வந்து லத்திகள் மற்றும் இரும்பு உருளைக் கொண்டு உடலில் காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஜான்சன் என்ற மீனவருக்கு இடதுதோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மீனவர்கள் ராமேசுவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துரதிருஷ்டவசமான சம்பவம், தமிழகத்தில் உள்ள மீனவர்கள் மத்தியில் பீதியையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது.

கடலோர காவல் படையினர் நடவடிக்கையைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாக் நீரிணைப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அறிவித்துள்ளனர். தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் பாக் நீரிணை மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் அடிக்கடி பிடித்துச் செல்லும் சம்பவங்களை தாங்கள் நன்கு அறிவீர்கள். மீனவர்களை நீண்ட காலத்துக்கு சிறையில் அடைத்து வைப்பதும், அவர்களது படகுகளை விடுவிக்காமல் இருப்பதும் தமிழகத்தில் உள்ள மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் ஏற்கெனவே உருவாக்கியுள்ளது.

எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ராணுவ அமைச்சகத்துக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment