Advertisment

அதிமுகவில் மீண்டும் மோதல் : மைத்ரேயன் உடைத்த ரகசியம்

இரட்டை இலை சின்னம் வரும் வரையில் ஓபிஎஸ் அணியின் தயவு தேவை. அதன் பின்னர் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேரும் தகுதி நீக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிமுகவில் மீண்டும் மோதல் : மைத்ரேயன் உடைத்த ரகசியம்

இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தாலும், இன்னமும் தனித்தனி அணிகளாகவே செயல்பட்டு வருகின்றனர். இதுவரை இலை மறை காய் மறையாக இருந்த இந்த விஷயம், அதிமுக எம்பி மைத்ரேயன், ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியதன் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இருந்து, மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அதன் பின்னர் அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் சட்டமன்ற கட்சி தலைவராகவும் அவர் தேர்வானார். இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் பிபரவரி 7ம் தேதி ஜெயலலிதா சமாதியில் மவுன விரதம் மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய போது, ‘சசிகலா தரப்பினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினமா செய்ய சொன்னார்’ என குற்றம் சாட்டினார்.

இதைத் தொடந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு ஓ.பி.எஸ்.க்கு கிடைத்தது. இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு வெற்றி பெற்றது. இதனிடையே காலியாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓபிஎஸ் அணியில் மதுசூதணன் போட்டியிட்டார். தொகுதியில் டிடிவி.தினகரனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இதை தேர்தல் கமிஷனால் தடுக்க முடியவில்லை. எனவே தேர்தலை நிறுத்தினர்.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தொடரப் பட்ட வழக்கில் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து தினகரன் வெளியே வந்ததும், அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க எடப்பாடி அணி ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, ஆகஸ்ட் 21ம் தேதி இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைந்தன.

ஓபிஎஸ்க்கு நிதித்துறையும் வீட்டுவசதித்துறையும் ஒதுக்கப்பட்டது. அவர் அணியில் கல்வி அமைச்சராக இருந்த கே.பாண்டியராஜனுக்கு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அப்போதே அதிருப்தி வெளிப்பட்டது. கட்சியைப் பொறுத்தவரையில் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். ஆனால் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கட்சி இணைப்பிலும், சின்னம் பெறுவது தொடர்பாகவும் மிக முக்கிய பங்காற்றிய மைத்ரேயன் எம்பி, இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?' என எழுதியுள்ளார்.

இதுவரையில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த பிரச்னை முதன் முறையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிமுகவின் என்னதான் நடக்கிறது என்பது குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

‘‘இரு அணிகளும் இணையும் போது, வழிகாட்டு குழு அமைக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்று வரையில் குழு அமைக்கப்படவில்லை. ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் யாருக்கும் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. ஆட்சி பொறுப்பில் கூட முக்கியத்துவம் இல்லாத பதவிகளே கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியைப் பொறுத்தவரையில் ஆட்சியும் அதிகாரமும் கையில் இருப்பதால், ஓபிஎஸ் அணியைப் பற்றி கவலைபடவில்லை. இரட்டை இலை சின்னம் வரும் வரையில் ஓபிஎஸ் அணியின் தயவு தேவை. அதன் பின்னர் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேரும் தகுதி நீக்க வழக்கைக் காரணம்காட்டி அப்புறப்படுத்த முயற்சி நடப்பதாக தெரிகிறது. இதை புரிந்து கொண்ட ஓபிஎஸ் அணியின் முக்கிய பிரமுகரான மைத்ரேயன், ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதன் பின்னராவது எடப்பாடி தரப்பு இறங்கி வந்தாக வேண்டும். இல்லையென்றால், கட்சியை கைப்பற்றும் வேலையில் ஓபிஎஸ் அணி இறங்கும். அப்போது மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment