Advertisment

போலி கல்விச் சான்றிதழ் தயாரித்த ஆந்திர பொறியாளர் கைது; சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை

போலி கல்விச் சான்றிதழ் தயாரித்ததாக ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது பொறியாளரை பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (சி.சி.பி) கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
arrest engineer

போலி கல்விச் சான்றிதழ் தயாரித்த ஆந்திர பொறியாளர் கைது

போலி கல்விச் சான்றிதழ் தயாரித்த நபரைக் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மானிட்டர், பிரிண்டர், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் ஸ்கேனர், லேப்டாப், மொபைல் போன்கள், 3 போலி சான்றிதழ்கள், சுமார் 50 வெற்று போலி சான்றிதழ் தாள்கள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Chennai police arrest engineer from Andhra Pradesh for making fake certificates

போலி கல்விச் சான்றிதழ் தயாரித்ததாக ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது பொறியாளரை பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (சி.சி.பி) கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறை கூறுகையில், சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் உதவி பிராந்திய பாதுகாப்பு அதிகாரி மெல்வின் ஜே.ஆர். பேஸ் நவம்பர் 16-ம்  தேதி ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். ஹேம்நாத் (24) மீது புகார் அளித்தார். எஃப்-1 மாணவர் விசா பெறுவதற்காக நேர்காணலின் போது ஹேமந்த் போலி சான்றிதழ்களை அளித்தாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், ஹேம்நாத் தயாரித்த போலி ஆவணங்களை, பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டையில் உள்ள எக்கோ ஓவர்சீஸ் கன்சல்டன்சியை சேர்ந்த ஹரிபாபு என்பவர் உருவாக்கியது தெரியவந்தது. 

இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஷீஜானி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நரசராவ்பேட்டையில் ஹரிபாபுவை கைது செய்தனர். ஹரிபாபு குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக போலி கல்விச் சான்றிதழ் தயாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். போலி சான்றிதழ் தயாரித்த ஹரிபாபு பி. டெக் பொறியாளர் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலி சான்றிதழ் தயாரித்த ஹரிபாபுவிடம் மானிட்டர், பிரிண்டர், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் ஸ்கேனர், லேப்டாப், மொபைல் போன்கள், 3 போலி சான்றிதழ்கள், 50 வெற்று சான்றிதழ் தாள்கள், 2 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிபாபு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment