Advertisment

சென்னை: தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசு... அனுதிக்கப்பட்டதை விட 2.5 மடங்கு மாசு அதிகரிப்பு!

தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னையில் காற்றில் மாசு பெருமளவு அதிகரிப்பு.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
,Central Pollution Control Board, Diwali, unhealthy air

தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னையில் காற்றில் மாசு பெருமளவு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment

தீபவாளிப் பண்டிகையையொட்டி மக்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர். இந்த நிலையில், பட்டாசு வெடித்ததனால் காற்றில் மாசு பெருமளவு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது, அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒன்றரை மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளது.

ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பது அனுமதிக்கப்பட்டுள்ள காற்று மாசு அளவாகும். ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்ததன் காரணமாக காற்று மாசு , ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் 3 இடங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் தெரியவந்தது.மாலை 4 மணி நேர நிலவரப்படி காற்று மாசு அளவு 263 மைக்ரான் என இருந்தது. காற்றிவ் நுண்துகள் அதிகம் கலந்ததால், பொதுமக்கள் சுவாசிக்க பிரச்சனைகள் ஏற்படும் என மாசுக்கட்டுபபாட்டு வாரியம் அறிவுறுத்தியது.

முன்னதாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக, மயிலாப்பூர், கிண்டி, , கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதேபோல, தாம்பரம் குரோம்பேட்டை ஆகிய இடைங்களில் பட்டாசு வெடித்ததனால் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment