Advertisment

பஸ் கட்டண உயர்வு : கொளத்தூரில் ஸ்டாலின், சைதாப்பேட்டையில் வைகோ - திருமா கைது

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மறியல் திட்டமிட்டபடி நடக்கிறது. இந்தப் போராட்டம் தொடபான LIVE UPDATES

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin, Dmk, Road Roko

MK Stalin, Dmk, Road Roko

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மறியல் திட்டமிட்டபடி நடக்கிறது. இந்தப் போராட்டம் தொடபான LIVE UPDATES

Advertisment

பஸ் கட்டண உயர்வு, தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் இதைக் கண்டித்து போராட்டம் நடத்தின. இதைத் தொடர்ந்து சிறிய அளவில் கட்டண குறைப்பை தமிழக அரசு நேற்று அறிவித்தது.

பஸ் கட்டண உயர்வை மலையளவு செய்துவிட்டு, மடு அளவில் குறைப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டித்தன. இது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று கூடி ஆலோசித்து இன்று மறியல் போராட்டத்தை அறிவித்தன. அதன்படி மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக மட்டுமல்லாமல், ஒன்றியம் மற்றும் பேரூர் வாரியாக இன்று மறியல் நடக்கிறது.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கின்றன. இந்த போராட்டத்தின் LIVE UPDATES இங்கே!

காலை 10.50 : சென்னை ராயப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டு கைதான திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பஸ் கட்டண உயர்வால், மக்கள் ரயில்களை நாடிச் செல்கிறார்கள். அரசு தனக்கு பணம் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் மக்கள் பாக்கெட்டுகளில் இருந்து எடுக்கக்கூடாது’ என்றார்.

thirunavukkarasar திருநாவுக்கரசர் கைதான போது...

காலை 10.40 : திருவள்ளூர் மாவட்டத்தில் 4 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்திருக்கிறது. அவற்றில் பஸ் கண்ணாடி உடைந்தது.

காலை 10.40 : கொளத்தூரில் கைதான ஸ்டாலின், அவர் தங்க வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி வாரியாக இன்று பல்லாயிரக்கணக்கானோர் மறியலில் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. பஸ் கட்டணத்தைக் குறைப்பதாக அரசு கூறியிருப்பது கண் துடைப்பு நாடகம். முழுமையாக பஸ் கட்டணத்தை வாபஸ் பெறாவிட்டால், மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி கடுமையான போராட்டங்களை நடத்துவோம்’ என்றார்.

காலை 10.25 : சைதாப்பேட்டையில் வைகோ, திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காலை 10.25 : கொளத்தூரில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மறியலின்போது, தொண்டர்கள் பஸ்ஸை வழிமறித்து, அதன் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர். சுமார் 20 நிமிட மறியலுக்கு பிறகு ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலை 10.20 : சைதாப்பேட்டையில் வைகோவுடன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் கலந்து கொண்டார். ‘இதை எதிர்க்கட்சிகளின் போராட்டமாக கருதாமல், மக்களின் உணர்வாக அரசு பார்த்து, பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்’ என்றார் திருமா.

காலை 10.10 : சைதாப்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து வைகோ மறியல் நடத்தினார். அப்போது அவர், ‘மாணவர்களும் மக்களும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக தானாக போராடி வருகிறார்கள். மெரினா புரட்சியைப் போல இது வெடிக்கும்’ என்றார்.

காலை 10.05 : கொளத்தூரில் ஸ்டாலின் தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்டு, பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அவருடன் காங்கிரஸ் தரப்பில் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார்.

காலை 10.00 : சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் ஊர்வலம்-மறியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார்.

காலை 9.40 : திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கொளத்தூரில் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். போலீஸ் தடுக்க முயற்சித்தும், ஸ்டாலின் அதற்கு உடன்படவில்லை. அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்ட ஸ்பாட்டுக்கு ஸ்டாலின் வந்து சேருவார்.

காலை 9.30 : திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கே.என்.நேரு தலைமையில் திரளான திமுக.வினர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலை 9.20 : சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டில் திரளான தொண்டர்கள் குவிந்திருக்கிறார்கள். காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், ஜெ.அன்பழகன் ஆகியோரின் வரவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

காலை 9.10 : காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே மறியலில் கலந்து கொள்கிறார்.

காலை 9.00 : திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூர், ஜவஹர் நகரில் மாநகராட்சி அலுவலகம் அருகே மறியல் செய்கிறார். இதையொட்டி அங்கு தொண்டர்கள் குவிந்தனர்.

 

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment