Advertisment

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : ‘இனி வருடம் தோறும் கட்டணத்தை உயர்த்துவோம்’ - அரசு

பஸ் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் கடையடைப்பு, மறியல் என போராட்டக் களத்தில் குதித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bus Fare Hike, parties opposed, Passengers Protest LIVE UPDATES

Bus Fare Hike, parties opposed, Passengers Protest LIVE UPDATES

பஸ் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் கடையடைப்பு, மறியல் என போராட்டக் களத்தில் குதித்தனர்.

Advertisment

பஸ் கட்டணம், தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று (19-ம் தேதி) வெளியிட்டது. இதன்படி 25 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை பஸ் கட்டணம் உயர்கிறது.

தமிழ்நாடு பஸ் கட்டணம் அதிரடி உயர்வு : புதிய உயர்வு பட்டியல் முழு விவரம்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தமிழ்நாடு முழுவதும் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி போராட்டங்களும் வெடித்தன. இது தொடர்பான LIVE UPDATES

பிற்பகல் 2.05 : வருடம் தோறும் இனிமேல் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

பிற்பகல் 2.00 : பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி ஜனவரி 22 அன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன இயக்கம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிற்பகல் 1.45 : ‘தனியார் பஸ் அதிபர்களின் நலனுக்காகவே பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக’ சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்து வரும் நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரித்திருப்பதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

பகல் 1.30 : போக்குவரத்துகழக நஷ்டத்தை மக்கள் மீது திணிப்பது கண்டிக்கத் தக்கது என திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

பகல் 1.00 : பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஜனவரி 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.

பகல் 12.30 : ‘6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு என்பது வாபஸ் பெறுவதற்காக அல்ல’ என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்தார்.

பகல் 12.00 : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பொதுமக்களும், கல்லூரி மாணவ மாணவிகளும் மறியல் நடத்தினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

பகல் 11.30 : பஸ் கட்டண உயர்வுக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பு குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘நியாயமான அளவிலேயே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதை வாபஸ் பெற முடியாது’ என குறிப்பிட்டார்.

பகல் 11.00 : பஸ் கட்டண உயர்வை மக்கள் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என மின் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

காலை 10.30 : திருவள்ளூரில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து பயணிகள் மறியல் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

காலை 10.00 : பஸ் கட்டண உயர்வை கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீர் மறியல் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலை 9.30 : அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவுதான் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

காலை 9.00 : அமைச்சர்கள் பலர் பஸ்ரூட்டுக்கு அதிபதியானதால்தான் பேருந்து கட்டண உயர்வு - டிடிவி தினகரன்

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment