‘ப்ளூ வேல்’ கேம்: விருதுநகரில் 18-வயது இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ப்ளூ வேல் கேம் விளையாடி, 18-வயது இளைஞர் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டத்தில் ப்ளூ வேல் கேம் விளையாடிய 18-வயது இளைஞர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் இந்த சம்பம் நிகழ்ந்துள்ளது. ஜெகதீஷ் என்ற 18 வயது இந்த ப்ளூ வேல் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், ப்ளூ வேல் விளையாட்டினால் ஜெகதீஷ், தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், காயமடைந்த ஜெகதீஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ், புதுவை பல்கலைக் கழகத்தில் படித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சசி ஹம்பா மாணவர் ஆகியோர் ப்ளு வேல் கேம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். அவ்வப்போது, ப்ளூ வேல் கேம் விளையாடும் மாணவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலுள்ள பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் பலர் சமீப காலமாக தற்கொலை செய்ய துண்டுவதற்கு முக்கிய காரமாக அமைந்திருக்கிறது இந்த ப்ளூ வேல் கேம். நீலத் திமிங்கிலம் எனச் சொல்லப்படும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டானது நாடு முழுவதும் பீதியை கிளப்பி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

×Close
×Close