Advertisment

நீட் போராட்டங்களுக்கு தடை : தமிழக கட்சிகள் அதிர்ச்சி

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது ஜனநாயகத்தின் குரலை நெறிக்கும் செயல் என, தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் போராட்டங்களுக்கு தடை : தமிழக கட்சிகள் அதிர்ச்சி

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது ஜனநாயகத்தின் குரலை நெறிக்கும் செயல் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

Advertisment

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதற்கு பிறகு தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவ அமைப்புகள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு எதிராக தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களை அமைதியான முறையில், காவல் துறையின் அனுமதி பெற்று, அரசின் தவறான கொள்கைகளுக்கும், திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இந்த நிலையில், இப்படிப்பட்ட உத்தரவு விந்தையாக உள்ளது”, என அவர் தெரிவித்தார்.

publive-image

மேலும், இந்த உத்தரவு ஜனநாயகத்தின் குரலை நெறிக்கும் செயல் எனவும், இந்த தீர்ப்பை ஏற்க இயலவில்லை எனவும் திருமாவளவன் கூறினார்.

”இந்த தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கும், அது வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கும் எதிரனாது. மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சட்டம் இருக்கும்போது, அதற்கு எதிராக போராட நமக்கு உரிமை உண்டு.”, என தெரிவித்தார்.

மேலும், இந்த உத்தரவை தீர்ப்பு என கருத இயலாது எனவும், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

publive-image

அதேபோல், தீர்ப்பு குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "இந்த தீர்ப்பு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்கள் போராடுவது அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையை தடுக்க அதிகாரம் இல்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொருத்தமானதாக இல்லை.”, என தெரிவித்தார்.

publive-image

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எழுந்துள்ளது. இத்தீர்ப்பு குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், சுயலாபத்திற்காக பொய்யான தகவல்களை மாணவர்களிடம் பரப்பி சில கட்சிகள் போராட்டத்தைத் தூண்டுகின்றன. நீட் தேர்வால் சமூக நீதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது.”, என தெரிவித்தார்.

Neet Supreme Court Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment