Advertisment

“மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்” - கமல்ஹாசன் அறிவிப்பு

‘மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறேன்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan, Vijaykanth, Meeting

Kamal Haasan, Vijaykanth, Meeting

‘மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறேன்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நற்பணி மன்ற செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. “நான் வெளியிட இருப்பது செயலி மட்டுமல்ல, அது ஒரு டிஜிட்டல் அரங்கம். உண்மைகளை மட்டுமே எப்போதும் எல்லோராலும் பேச முடியாததாக இருக்கிறது. தவறான ஆட்களிடம் தானத்தைக் கொடுப்பது கூட தவறுதான். நல்லது செய்தாலும், பண்பு அறிந்து ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.

மக்கள் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் என் கனவு. தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதடைந்துள்ளதாகக் கருதுகிறேன். அக்கிரமங்களுக்கு எதிராகத் தரப்படும் குரல்கள் குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

தீயவை நடக்கும்போது விசில் அடிக்கும் கருவியாக ‘மய்யம் விசில்’ செயலி செயல்படும். மக்கள் பிரச்னைகளை #maiamwhistle #KH #theditheerpomvaa #virtuouscvcles ஆகிய ஹேஷ்டேக்கில் பேசலாம்.

கட்சி தொடங்குவதற்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்கிவிட்டேன். சினிமா எடுப்பதற்கே 6 மாதங்கள் முன்னேற்பாடுகள் செய்பவன் நான். அரசியல், அதைவிட பெரிய பணி. அரசியல் கட்சிக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்துவிட்டது. உங்கள் உதவியுடன் அது நடக்கும்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‘நீங்களாவது அரசியலுக்கு வருவீர்களா? இல்லை, கடைசிவரை போக்கு காட்டிக் கொண்டிருப்பீர்களா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், “நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அறிவிக்கவே இந்த சந்திப்பு” என்றார்.

மேலும்,  “அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்கவே இந்த செயலி” என்று தெரிவித்த கமல்ஹாசன், “கொசஸ்தலை ஆறு குறித்த எழுந்த விவாதம், வெற்றியை நோக்கிய சிறிய நகர்வு மட்டுமே. ஜனவரி மாதம் என்னுடைய குழுவில் இருப்பவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவேன்.  234 தொகுதிகளிலும் தவறு செய்யாதவர்களுக்கே இடம். என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் நடவடிக்கை எடுப்பேன். ஏற்கெனவே தவறு செய்தவர்களுக்கு இங்கு இடமில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment