Advertisment

மன்னிப்பு கோரிவிட்டால் தவறு இல்லை என்றாகி விடுமா? எஸ்.வி. சேகர் வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

ஒரு தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் அது தவறு இல்லை என்றாகிவிடுமா என உயர் நீதிமன்றம் எஸ்.வி. சேகர் வழக்கில் கேள்வியெழுப்பி உள்ளது.

author-image
WebDesk
New Update
Adjournment of judgment in SV Shekhar case

நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் 2018ஆம் ஆண்டு பரவிய தகவலை, நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisment

அவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, தேசியக் கொடி அவமதிப்பு வழக்கும் அவர் மீது தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றம் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தது. இது அருவருக்கதக்க செயல் என எஸ்வி சேகரை கண்டித்திருந்தது.

இந்த நிலையில், இன்று வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உயர் நீதிமன்ற நீதிபதி,

தவறான, அவதூறான கருத்து கூறிவிட்டு உடனே மன்னிப்பு கோரிவிட்டால் தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா? எனக் கேள்வியெழுப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sv Sekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment