Advertisment

முதல்வரை பதவி விலகச் சொன்ன கமல்ஹாசன்: தெரிந்து தான் பேசுகிறாரா? - கஸ்தூரி

கமல்ஹாசனின் ஒவ்வொரு ட்வீட்டிற்கும் சான்றுடன் பதில் அளித்துள்ளார் கஸ்தூரி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
முதல்வரை பதவி விலகச் சொன்ன கமல்ஹாசன்: தெரிந்து தான் பேசுகிறாரா? - கஸ்தூரி

நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டரில் அடுக்கடுக்கான சில அதிரடி ட்வீட்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக, ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏன் இன்னும் முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என குறிப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதன்முறையாக நேரடியாக விமர்சித்து இருந்தார். இந்த ட்வீட்கள் அனைத்தும் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டன.

Advertisment

கமலின் இந்த ட்வீட்களுக்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமீபகாலமாக அதிகம் அரசியல் பேசி வரும் நடிகை கஸ்தூரி, கமலுக்கு தனது ட்விட்டரில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கமல் தனது முதல் ட்வீட்டில், "ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்தும் எந்த கட்சிகளும் முதல்வரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள கஸ்தூரி, "பெரும்பாலும்  தினந்தோறும் தமிழக எதிர்க்கட்சி, தமிழக அரசை பதவி விலக வலியுறுத்தி வருகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், ஆளுநரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. அதேபோல், குட்கா ஊழலிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கமலுக்கு தெரியுமா தெரியாதா? அவரது மனதில் என்னதான் உள்ளது?" என குறிப்பிட்டுள்ளார்.

கமல் தனது இரண்டாவது ட்வீட்டில், "எனது இலக்கு என்பது சிறப்பான தமிழகம். எனது குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். இந்தக் கருவிகள் பயன்படவில்லை எனில், வேறு ஒன்றை கண்டறிய வேண்டியது தான்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள கஸ்தூரி, " புதிய எதிர்காலத்திற்காக சேர்ந்து உழைக்க தமிழக இளைஞர்கள் தயாராகவும், காத்துக் கொண்டும் இருக்கின்றனர். கமல் சார், உங்கள் மனதில் என்ன தான் உள்ளது?" என குறிப்பிட்டுள்ளார்.

கமல் தனது மூன்றாவது ட்வீட்டில், "சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் லெல்வோம்" என்று கூறியிருந்தார்.

இதற்கு கமலின் பாணியிலேயே பதில் அளித்த கஸ்தூரி, "குரல்கொடுத்தால் கைகொடுக்க காத்திருக்கும் கண்மணிகள் கோடியுண்டு. ஓடிவருவர் கட்டளைக்கு கரைப்புரண்டே" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அளித்த பேட்டியில், "கமல்ஹாசன் கூறும் பல்வேறு கருத்துக்கள் ஏற்கனவே நாங்கள் கூறி வருபவைதான்.  தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கமல்ஹாசன் கவனிக்கிறாரா என்பது தெரியவில்லை" என்று சீமான் விமர்சித்துள்ளார்.

Dmk Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment