Advertisment

நாகப்பட்டினம் பணிமனை விபத்து : பலியான பஸ் ஊழியர்கள் எண்ணிக்கை 9 ஆனது

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டிடம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில் பலியான பஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 9 ஆனது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nagai - workshop

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டிடம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த விபத்து குறித்து முதலமைச்சரிடம் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அப்போது, உடனடியாக அவரை பொறையார் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணியை கவனிக்கும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுபற்றி போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், ‘பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 டிரைவர்கள் ஒரு கண்டக்டர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் உரிய நிவாரணம் அறிவிப்பார். விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ளும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்று விபத்துக்கள் ஏற்படாத வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பழமையான பணிமனை கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அரசின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறி, பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் பொது மக்களும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலியானவர்களின் பெயர் விவரம் தெரியவந்தது. அவர்கள் விவரம் : நாகப்பட்டினம் மாவட்டம், மணக்குடியைச் சேர்ந்த கனி, காலமநல்லூரைச் சேர்ந்த மணிவண்ணன், கீழகாசாக்குடியைச் சேர்ந்த தனபால், காளஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன், பாலு, கீழையூரைச் சேர்ந்த சந்திரசேகர், சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் கீழப்பெரம்பூரைச் சேர்ந்த முனியப்பன் ஆகிய எட்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதற்கிடையே காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆனது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஏழரை லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு போக்குவரத்துக் கழகத்தில் வேலையும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment