18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : சென்னை ஐகோர்ட்டில் விசாரணை

டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு தொடங்கியது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு தொடங்கியது.

சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதம் செய்கிறார்.

ஓ.பி்எஸ். உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற புகாரில் தடாலடியாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாது. சபாநாயகர் என்பவர் அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்து முடிவெடுப்பவர்.

மேலும் இந்த 18 பேரை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என கூற முடியாது. ஏனெனில் எந்த நோக்கத்தில் அந்த 18 பேரும் இருந்தனர், யார் அவர்களை இயக்கியது என்பனவற்றை தீர ஆராய்ந்தே சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கையை எடுத்தார்.

நீதிபதிகள் :

தகுதி நீக்க நடவடிக்கையில் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளதா? தகுதி நீக்க நடவடிக்கைகள் உரிய முறையில் கடைபிடிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும்

சபாநாயகர் தரப்பு, அரியமா சுந்தரம் :

இதற்கு பதிலளித்த அவர், நாங்கள் எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை என்றும், உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என எவர் புகார் தெரிவிக்கிறனரோ அவர்கள் தான் அதை நிரூபிக்க வேண்டும். மேலும் எந்த தேதியில் சபாநாயகரை சந்தித்தனர். முதல்வரை சந்தித்தனர் என்ற விவரம் இல்லை. எனவே அவர்களின் குற்றச்சாட்டை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், முதல்வர் மீது குற்றச்சாட்டுகள் இருக்குன்றன என்பது உட்கட்சி விவகாரம். ஆனால் அந்த பிரச்சனை குறித்து உட்கட்சிக்குள் கேள்வியோ, பிரச்சனையோ எழுப்பவில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை. மேலும் முதல்வர் மீதான அதிருப்பதி விவகாரத்தை உட்கட்சியில் எழுப்பாமல் நேரடிநாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இது உள்நோக்கமானது. இந்த செயல் டி.டி.வி. தினகரன் பின்புலத்தில் அவரின் பரிந்துரையின் பேரில் தான் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அதற்கு ஆதாரமான கடிதம் தங்களிடம் உள்ளது.

உட்கட்சி விவகாரத்தை துணை பொதுச்செயலாளர் என்று தினகரன் ஆகஸ்ட் 21ம் தேதி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 22ம் தேதி 19 எம்.எல்.ஏ.க்கள் நேரடியாக ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். இது கட்சி விதிகளுக்கு உட்பட்டு கொடுக்கவில்லை.

நீதிபதிகள் :

தினகரன் எழுதிய கடிதம் இந்த 19 பேருக்கு எழுதுயதாக தெரியவில்லை. இது பொதுவாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் எழுதியது போல உள்ளதே?

சபாநாயகர் தரப்பு, அரியமா சுந்தரம்:

அந்த கடிதத்தை இந்த 19 பேரை தவிர வேறு எவரும் ஏற்றுக்கொள்ளவில்லையே, மேலும் பிறரும் ஏற்று கொண்டார்கள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் தினகரனின் உத்தரவின்படியே 19 எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரை சந்தித்து கடிதத்தை கொடுத்தனர். இதன் முக்கிய நோக்கம் அரசை கவிழ்க்க வேண்டும் என்பதே. மேலும் முதல்வர் மீதான அதிருப்தியை 6 வாரம் உட்கட்சிக்குள் எழுப்பினோம் என்பதை அவர்கள் ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் முதல்வரிடம் அதிருப்பதியை தெரிவித்தோம் என்பதை அவர் மறுத்துள்ளார். எனவே எதிர்தரப்புக்கு தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க வேண்டுமெனில் முதல்வரை குறுக்கு விசாரணை செய்வதே, அவர்களின் நோக்கம்.

×Close
×Close