Advertisment

நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை; யுவராஜ் சிங் ஓபன் டாக்

நாங்கள் ஒருபோதும் நெருங்கிய நண்பர்களாக இருக்கவில்லை, கிரிக்கெட்டின் காரணமாக மட்டுமே நாங்கள் நண்பர்களாக இருந்தோம்; தோனியுடனான உறவு குறித்து யுவராஜ் சிங் ஓபன் டாக்

author-image
WebDesk
New Update
yuvaraj and dhoni

மகேந்திர சிங் தோனியும் யுவராஜ் சிங்கும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு மகிழ்ச்சியைக் கொண்டாடினர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - கெவின் டிசோசா)

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்தியாவுக்காக இரண்டு உலகக் கோப்பைகளை ஒன்றாக வென்ற தானும் எம்.எஸ் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் எங்களின் வாழ்க்கை முறை முற்றிலும் எதிர்மாறாக இருந்தது என்றும் ஒப்புக்கொண்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘We were never close friends’: Yuvraj Singh opens up about his relationship with MS Dhoni

நானும் மஹியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை. நாங்கள் கிரிக்கெட்டின் காரணமாக நண்பர்களாக இருந்தோம், ஒன்றாக விளையாடினோம். மஹியின் வாழ்க்கை முறை என்னிடமிருந்து மிகவும் வித்தியாசமானது, எனவே நாங்கள் ஒருபோதும் நெருங்கிய நண்பர்களாக இருக்கவில்லை, கிரிக்கெட்டின் காரணமாக மட்டுமே நாங்கள் நண்பர்களாக இருந்தோம்,” என்று யுவராஜ் டி.ஆர்.எஸ் நிகழ்ச்சியில் கூறினார்.

உங்கள் அணி வீரர்கள் களத்திற்கு வெளியே உங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வாழ்க்கை முறை, திறமைகள் உள்ளன,” என்று யுவராஜ் கூறினார்.

சில நபர்கள் குறிப்பிட்ட நபர்களுடன் ஹேங்அவுட் செய்கிறார்கள், களத்திற்குச் செல்ல நீங்கள் அனைவருடனும் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை,” என்று யுவராஜ் கூறினார்.

நீங்கள் எந்த அணியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், பதினொரு பேருக்குள்ளும் ஒத்துப்போவதில்லை. சிலர் ஒன்றாக இருப்பார்கள், சிலர் ஒன்றாக இருக்க மாட்டார்கள். நீங்கள் அணியில் இருக்கும்போது, ​​உங்கள் ஈகோவை பின்னால் வைத்து களத்தில் பங்களிக்கவும்,” என்று யுவராஜ் கூறினார்.

நானும் மஹியும் மைதானத்திற்குச் சென்றபோது, ​​நாங்கள் எங்கள் நாட்டிற்கு 100% க்கு மேல் கொடுத்தோம். அதில் அவர் கேப்டன், நான் துணை கேப்டன். நீங்கள் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இருக்கும்போது, ​​முடிவுகளில் வேறுபாடுகள் இருக்கும். சில நேரங்களில் அவர் எனக்குப் பிடிக்காத முடிவுகளை எடுத்தார், சில சமயங்களில் அவருக்குப் பிடிக்காத முடிவுகளை நான் எடுத்தேன். இது எல்லா அணிகளிலும் நடக்கும்,” என்று யுவராஜ் கூறினார்.

2019 உலகக் கோப்பைக்காக தேர்வாளர்கள் தன்னைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெளிவான படத்தை வழங்கியவர் எம்.எஸ் தோனி என்றும் யுவராஜ் ஒப்புக்கொண்டார்.

நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது, ​​எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த சரியான தெளிவு கிடைக்காதபோது, ​​அவரிடம் ஆலோசனை கேட்டேன்,” என்று யுவராஜ் கூறினார்.

தேர்வுக் குழு இப்போது உங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்று என்னிடம் சொன்னவர் மஹிதான். குறைந்த பட்சம் உண்மையான நிலையையாவது தெரிந்து கொண்டேன். இது 2019 உலகக் கோப்பைக்கு சற்று முன்பு. அதுதான் யதார்த்தம்என்று யுவராஜ் கூறினார்.

2011 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக தோனி இரண்டு பந்துகளைத் தடுத்து ரன் எடுக்காமல் விட்டதையும் யுவராஜ் நினைவு கூர்ந்தார், இதனால் யுவராஜ் தனது அரை சதத்தை எட்ட முடிந்தது.

"எம்.எஸ். தோனி காயமடைந்த சில சமயங்களில், நான் அவருக்கு ரன்னராக இருந்தேன். அவர் 90 ரன்களில் இருந்தபோது ஒரு தருணம் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது, அவர் 100ஐ எட்டுவதற்கு அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க விரும்பினேன். அவர் 90 ரன்களில் இருந்தப்போது, இரண்டாவது ஓட்டத்திற்காக அவருக்காக டைவிங் செய்தது எனக்கு நினைவிருக்கிறது,” என்று யுவராஜ் கூறினார்.

உலகக் கோப்பைப் போட்டியில் நான் பேட்டிங் செய்தபோது, ​​நெதர்லாந்துக்கு எதிராக 48 ரன்களில் இருந்தேன். அரை சதத்திற்கு 2 ரன்கள் தேவை, மஹி இரண்டு பந்துகளையும் தடுத்து, ரன் எடுக்காமல் விட்டுவிட்டார், அதனால் நான் 50 ரன்களைப் பெற்றேன்,” என்று யுவராஜ் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment