Advertisment

தொடக்கம் முதல் ஆதிக்கம்... தெலுங்கு டைட்டன்சை புரட்டி எடுத்த பெங்கால் வாரியர்ஸ் அபார வெற்றி!

புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் நேற்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் 46 -26 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி பந்தாடியது.

author-image
WebDesk
New Update
Telugu Titans vs Bengal Warriors Pro Kabaddi League Season 10 match updates in tamil  

புரோ கபடி லீக் 2023 - 24: தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதில் இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், போட்டி நேர முடிவில் 46 -26 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

தெலுங்கு டைட்டன்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ் 

நடப்பு சீசனில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் 1 வெற்றி, 9 தோல்வி என 9 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 12வது, அதாவது கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம், பெங்கால் வாரியர்ஸ் 10 போட்டிகளில் 3ல் வெற்றி, 5ல் தோல்வி, 2ல்  டை என 23 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

ஜனவரி 6 ஆம் தேதி குஜராத் ஜெயன்ட்ஸுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தெலுங்கு டைட்டன்ஸ் இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. அவர்கள் 30-37 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். இது இந்த சீசனில் அவர்களின் ஒன்பதாவது தோல்வியாகும்.

இதற்கிடையில், பெங்கால் வாரியர்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் ஜனவரி 7 அன்று 35-41 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸிடம் தோற்றது.

நேருக்கு நேர் 

பிகேஎல் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் 20 முறை மோதியுள்ளன. இதில், தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 12 வெற்றிகளுடன், பெங்கால் வாரியர்ஸ் அணி நேருக்கு நேர் சாதனை படைத்துள்ளது. இதில் 5 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் 3 முறை தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

சீசன் 9 இல் கடைசியாக தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெங்கால் அணி 36-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment