Advertisment

சாய்ந்து போன ஸ்டம்ப்; அப்படியே இருக்கும் பெயில்கள்: பேட்ஸ்மேன் அவுட்டா இல்லையா?

ஸ்டம்பு சாய்ந்தும் கள நடுவர்கள் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள், கிரிக்கெட் விதி குறித்து சமூக வலைதள பக்கங்களில் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Stump rattled but bails stay intact the batsman out or not Tamil News

பேட்ஸ்மேன் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்ட முடிவில் நான் மகிழ்ச்சியடையவில்லை என்று வெஸ்ட் டிஸ்ட்ரிக்ட் அணியின் கேப்டன் சாம் வைட்மேன் கூறினார்.

cricket-news: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்றாம் தரப் போட்டியான ஏ.சி.டி பிரீமியர் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், கினிந்தெரா கிரிக்கெட் கிளப் மற்றும் வெஸ்ட் டிஸ்ட்ரிக்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று அரங்கேறியது. 

Advertisment

இந்த போட்டியின் போது, கினிந்தெரா அணியின் பந்துவீச்சாளரான ஆண்டி ரெனால்ட்ஸ் தொடக்க ஆட்டக்காரரான மத்தேயு போஸ்டோவை கிளீன் போல்ட் செய்ததாக உணர்ந்து சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டார். இதனைப் பார்த்த பேட்ஸ்மேன் மத்தேயு போஸ்டோவ்-வும் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். 

ஆனால், கேமரா ஸ்டம்பு பக்கம் திரும்பிய போது, மிடில் ஸ்டம்பு சாய்ந்து இருந்ததும், பெயில்கள் ஸ்டம்பில் அப்படியே இருந்ததும் தெளிவாக தெரிந்தது. இதனால், விதியின் படி, கள நடுவர்கள் பேட்ஸ்மேன் அவுட் இல்லை என அறிவித்தனர். இதனையடுத்து, பேட்ஸ்மேன் மத்தேயு போஸ்டோவ் தனது கிரீஸுக்குத் திரும்பினார். 

இந்நிலையில், ஸ்டம்பு சாய்ந்தும் கள நடுவர்கள் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள், கிரிக்கெட் விதி குறித்து சமூக வலைதள பக்கங்களில் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: You be the umpire: Stump rattled, but bails stay intact… is the batsman out or no?

விதி கூறுவது என்ன? 

மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) விதியின்படி, "ஸ்டம்புகளின் மேற்புறத்தில் இருந்து குறைந்தபட்சம் ஒரு பெயில் முழுவதுமாக அகற்றப்பட வேண்டும் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டம்புகள் தரையில் இருந்து அகற்றப்பட வேண்டும். அப்போது தான் விக்கெட் வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்படும்." 

சட்டம் 29.22 இன்படி, "தற்காலிகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெயில் மீது ஏற்படும் இடையூறு, ஸ்டம்புகளின் மேற்புறத்தில் இருந்து முழுமையாக அகற்றப்படுவதைக் குறிக்காது. ஆனால் இரண்டு ஸ்டம்புகளுக்கு இடையில் லாட்ஜ்கள் விழுந்தால், இது முழுமையாக நீக்கப்பட்டதாகக் கருதப்படும்." என்று கூறுகிறது. 

பேட்ஸ்மேன் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்ட முடிவில் நான் மகிழ்ச்சியடையவில்லை என்று ஒப்புக்கொண்ட வெஸ்ட் டிஸ்ட்ரிக்ட் அணியின் கேப்டன் சாம் வைட்மேன், இப்படியான தான் சம்பவத்தை ஒருபோதும் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். 

"இதுவரை நான் பார்த்ததில்லை. நாங்கள் அனைவரும் பின்னர் அதை மிகவும் வேடிக்கையாகக் கண்டோம். அந்த நேரத்தில் நாங்கள் விக்கெட் வீழ்த்தியதில் மகிழ்ச்சியாக இருந்தோம். பிறகு பேட்ஸ்மேன் திரும்பி வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு நாங்கள் அவரது விக்கெட்டை கைப்பற்றினோம். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது." என்று கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

cricket news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment