Advertisment

SRH vs LSG: பவுண்டரி மழை பொழிந்த ஹெட், அபிஷேக்; லக்னோவை வீழ்த்தி ஹைதராபாத் இமாலய வெற்றி

பூரன், படோனி அதிரடியால் 165 ரன்கள் சேர்த்த லக்னோ; ஹெட், அபிஷேக் பவுண்டரி மழை; விக்கெட் இழப்பின்றி 9.4 ஓவர்களில் வெற்றி பெற்ற ஹைதராபாத்; புள்ளி பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

author-image
WebDesk
New Update
SRH vs LSG Live Score IPL 2024 Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, Match 57 today scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Sunrisers Hyderabad | Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 57வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: SRH vs LSG Live Score, IPL 2024

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்

லக்னோ பேட்டிங்

லக்னோ அணியில் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் டிகாக் களமிறங்கினர். டிகாக் 2 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டோனிஸ் 3 ரன்களில் வெளியேறினார். இரண்டு விக்கெட்களையும் புவனேஷ்வர் வீழ்த்தினார். அடுத்து க்ருனால் பாண்டியா களமிறங்கினார். மறுமுனையில் ஆடி வந்த ராகுல் 29 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பூரன் அதிரடியாக ஆடினார். இருப்பினும் மறுமுனையில் ஆடி வந்த பாண்டியா 24 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால் லக்னோ அணி 11.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

இதனையடுத்து பூரன் உடன் படோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். படோனி அரை சதம் விளாசினார். இருவரும் இணைந்து 99 ரன்கள் சேர்த்த நிலையில், லக்னோ அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. பூரன் 48 ரன்களுடனும், படோனி 55 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் புவனேஷ்வர் 2 விக்கெட்களையும்,. கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

ஹைதராபாத் பேட்டிங்

ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இருவரும் பவுண்டரி மழை பொழிந்தனர். இருவரது விக்கெட்களையும் வீழ்த்த முடியாமல் லக்னோ பவுலர்கள் திணறினர். அபிஷேக் 19 பந்துகளில் அரை சதம் விளாசினார். மறுபுறம் ஹெட் 16 பந்துகளில் அரை சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அணியை வெற்றிப் பெறச் செய்தனர்.

ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது. அபிஷேக் 28 பந்துகளில் 75 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். ஹெட் 30 பந்துகளில் 89 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். இந்த வெற்றி மூலம் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நடப்பு சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடியிருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 வெற்றி 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி 5 தோல்வி என அதே 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளன. இந்த அணிகளில் யார் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்சை பின்னுக்கு தள்ளி அந்த இடத்துக்கு முன்னேறலாம். 

இந்த இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்விக்குப் பிறகு களமாடுகிறார்கள். மேலும், வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசிக்கவும், அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தவும் கடுமையாக போராடுவார்கள். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

நேருக்கு நேர் 

ஐ.பி.எல் தொடரில் ஐதராபாத் - லக்னோ அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Lucknow Super Giants Sunrisers Hyderabad IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment