Advertisment

சொந்த மண்ணில் ஐதராபாத்தை மடக்கிய ஆர்.சி.பி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்சன் மீம்ஸ்

சொந்த மண்ணில் ஐதராபாத்தை பெங்களூரு அணி வீழ்த்திய நிலையில், ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியாக்சன் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
SRH Owner Kavya Marans Reaction In IPL 2024 match vs RCB Memes Tamil News

தனது அணி சொந்த மண்ணில் பெற்ற தோல்வியால் மனமுடைந்து இருக்கிறார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Kavya Maran | Sunrisers Hyderabad | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வியாழக்கிழமை ஐதராபாத்தில் நடந்த 41-வது லீக் ஆட்டம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்களும், ரஜத் படிதார் 50 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனத்கட் 3, நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இதனையடுத்து, 207 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஐதராபாத் அணி  20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்தடுத்த விக்கெட் இழப்பு ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. பெங்களூரு அணியின் பவுலர்கள் தரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி அசத்திய நிலையில், 35 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மிரட்டியது பெங்களூரு. அந்த அணி தரப்பில் கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங் மற்றும் கரண் சர்மா தலா 2 விக்கெட்டையும், வில் ஜாக்ஸ் மற்றும் யாஷ் தயாள் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

மனமுடைந்த காவ்யா மாறன் - வைரல் மீம்ஸ் 

நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் சேர்த்து பிரமிக்க வைத்தது ஐதராபாத். ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த அணி (பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள்) என்ற சாதனையை படைத்த ஐதராபாத் அணி தொடர்ந்து ரன்வேட்டையில் மிரட்டியது. இந்த நிலையில் தான், பெங்களூரு அணி ஐதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து 171 ரன்களுக்கு மடக்கியது. இந்த அசத்தல் வெற்றி பெங்களூரு அணியினரும், ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். 

ஆனால், தனது அணி சொந்த மண்ணில் பெற்ற தோல்வியால்  மனமுடைந்து இருக்கிறார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். நேற்றைய ஆட்டத்தில்  டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் ஷர்மா போன்ற முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறிய போது அவர் கடும் அதிருப்தி அடைந்தார். அப்போது அவர் கொடுத்த ரியாக்சன் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், காவ்யா மாறனின் ரியாக்சனை இணையவாசிகள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மோசமான பேட்டிங் காவ்யா மாறனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். ஒரு சிலர் காவ்யா மாறனின் ரியாக்சனை அனைவருக்கும் பிடித்த பார்லே-ஜி பெண்ணுடன் ஒப்பிட்டுள்ளனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Sunrisers Hyderabad Royal Challengers Bangalore IPL 2024 Kavya Maran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment