Advertisment

டெஸ்ட் போட்டியில் ரோஹித்துக்கு புதிய ஆஃபர்! தள்ளுபடி ஆகாமல் இருந்தால் சரி

லோகேஷ் ராகுல் உண்மையில் அதி திறன் மிக்க வீரர். ஆம், அவர் டெஸ்ட் போட்டியில் கடினமான நேரத்தை அனுபவித்து வருகிறார். அவரது ஃபார்ம் குறித்து நாங்கள் நிச்சயம் ஆலோசிப்போம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rohit Sharma as Test opener can definitely be considered MSK Prasad - டெஸ்ட் போட்டியில் ரோஹித்துக்கு கிடைக்கும் புதிய ஆஃபர்! தள்ளுபடி ஆகாமல் இருந்தால் சரி

Rohit Sharma as Test opener can definitely be considered MSK Prasad - டெஸ்ட் போட்டியில் ரோஹித்துக்கு கிடைக்கும் புதிய ஆஃபர்! தள்ளுபடி ஆகாமல் இருந்தால் சரி

ரோஹித் ஷர்மா இந்திய குறுகிய ஓவர் கிரிக்கெட்டின் துணை கேப்டன் மட்டுமல்லாது பேட்டால் கதற கதற வினையாற்றும் கிரிக்கெட்டர். நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அவர் குவித்து வைத்த 648 ரன்களே அதற்கு சாட்சி.

Advertisment

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட் இதுவரை பெரியளவில் சுழலாதலால் தனக்கென நிரந்தர பொசிஷனை டெஸ்ட் அணியில் அவரால் நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கூட வாய்ப்பு கிடைத்தும், பிளேயிங் XIல் அவரால் நுழைய முடியவில்லை. ஆனால், ரோஹித்தின் எதிர்கால டெஸ்ட் குறித்து பாஸிட்டிவ் நோட் கொடுத்திருக்கிறார் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "லோகேஷ ராகுலின் ஃபார்ம் கவலைக்குரியதாக மாறும் பட்சத்தில், ரோஹித் ஷர்மாவை டெஸ்ட் போட்டியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குவது குறித்து யோசிப்போம். வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த பிறகு, தேர்வுக்குழு இதுவரை கூடவில்லை. நாங்கள் அனைவரும் கூடும் போது, ரோஹித்தை டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்குவது குறித்து நிச்சயம் ஆலோசிப்போம்.

லோகேஷ் ராகுல் உண்மையில் அதி திறன் மிக்க வீரர். ஆம், அவர் டெஸ்ட் போட்டியில் கடினமான நேரத்தை அனுபவித்து வருகிறார். அவரது ஃபார்ம் குறித்து நாங்கள் நிச்சயம் ஆலோசிப்போம். களத்தில் அவர் நீண்ட நேரம் செலவிட்டு, மீண்டும் தனது டச் மற்றும் ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும்." என்றார்.

லோகேஷ் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் சீரிஸில் 13, 6, 44, 38 ஆகிய ரன்களே எடுத்திருந்தார்.

மேலும் அவர், "ஸ்பின் பந்துவீச்சில் புதிய வெவ்வேறு வாய்ப்புகள் கொடுக்கும் நோக்கில், டி20 உலகக் கோப்பையை எதிர்நோக்கி இளம் வீரர்களை முயற்சிக்கவிருக்கிறோம். கடந்த இரு ஆண்டுகளாக சாஹலும், குல்தீப்பும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உலகக் கோப்பைக்கான ரேஸில் அவர்களே முன்னிலையில் உள்ளனர். இப்போது வேறு சில புதிய வாய்ப்புகளை நாங்கள் பரிசோதிக்கிறோம், அவ்வளவே." என்றார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் இந்த duo ஸ்பின்னர்கள் அணியில் இடம்பெறவில்லை. எதிர்வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும், இந்த இணை அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Rohit Sharma Lokesh Rahul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment