Advertisment

அரியானாவை சாய்த்த பாட்னா; பெங்களூருவை வீழ்த்திய உ.பி.யோத்தாசுக்கு த்ரில் வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய பாட்னா பைரேட்ஸ் அணி 46 - 33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
Patna Pirates vs Haryana Steelers and UP Yoddhas vs Bengaluru Bulls PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023: தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளுடன் 11ம் இடத்தில் உள்ளது. 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்த நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய பாட்னா பைரேட்ஸ் அணி 46 - 33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பின் உச்சத்திற்கே சென்ற இந்த ஆட்டத்தில் 34-33 என்கிற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் த்ரில் வெற்றி பெற்றது. 

புரோ கபடி புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, 31 புள்ளிகளுடன் புனேரி பல்டன் முதல் இடத்திலும்,  28 புள்ளிகளுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 2ம் இடத்திலும் உள்ளன. இதேபோல், 28 புள்ளிகளுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் 3ம் இடத்திலும், 26 புள்ளிகளுடன் ஹரியானா ஸ்டீலர்ஸ் 4ம் இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளுடன் 11ம் இடத்தில் உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment