Advertisment

MI vs SRH Highlights: சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் : மும்பை அணிக்கு 4-வது வெற்றி

ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (திங்கள்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கும் 55 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது.

author-image
WebDesk
New Update
MI vs SRH LIVE Score IPL 2024 55 match today Mumbai Indians vs Sunrisers Hyderabad scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Mumbai Indians | Sunrisers Hyderabad: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (திங்கள்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கும் 55 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: MI vs SRH LIVE Score, IPL 2024

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக மும்பை அணியின் பந்துவீச்சில் எக்ஸ்ரா ரன்கள் அதிகம் கிடைத்தது ஐதராபாத் அணி ரன் குவிக்க சாதகமாக அமைந்தது.

முதல் விக்கெட்டுக்கு ஐதராபாத் அணி 5.5 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தபோது அபிஷேக் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால் 5 ரன்களில் வெளியேறிய நிலையில், சிறிது நேரம் தாக்குபிடித்த நித்தீஷ் ரெட்டி, 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த க்ளாசன் 2 ரன்களில் வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், சற்று அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட், அரைசதத்தை நெருங்கிய நிலையில், 30 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜென்சன் 17, சபாஷ் அகமது 10, சமத் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. கம்மின்ஸ் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மும்பை அணி தரப்பில், ஹர்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா, கம்பொஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 174 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி சுமாரான தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி 1.4 ஓவர்களில் 26 ரன்கள் சேர்த்தபோது,  இஷான் கிஷன் 7 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நம்ன் தார் 9 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

ரோகித் சர்மா 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்து வெளியேறியதால், மும்பை அணி 4.1 ஓவர்களில் 31 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி அணியை சரியில் இருந்து மீட்டு வெற்றிப்பதைக்கு திருப்பியது. திலக் வர்மா நிதனமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் சூர்யகுமார் யாதல் ருத்ரதாண்டம் ஆடினார்.

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டம் காரணமாக மும்பை அணி வெற்றியை நோக்கி சிறப்பாக முன்னேறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார். குறிப்பாக ஐதராபாத் கேப்டன் கம்மின் ஓவரை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ், 96 ரன்களில் இருந்தபோது அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்த அவர், 51 பந்துகளில் சதம் கடந்து 102 ரன்கள் குவித்தார்.

17.2 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சூர்யகுமார் - திலக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்து அசத்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai Indians Sunrisers Hyderabad IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment