Advertisment

KKR vs PBKS Highlights: ஜானி பேர்ஸ்டோ சதம்... ஷஷாங் சிங் சிக்சர் மழை : பஞ்சாப் அணி சாதனை வெற்றி

ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.

author-image
WebDesk
New Update
KKR vs PBKS Live Score IPL 2024 Match 42 today Kolkata Knight Riders vs Punjab Kings scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Kolkata Knight Riders | Punjab Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs PBKS Live Score, IPL 2024

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் – பிளிப் சால்ட் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இவர்கள் இருவருமே கொடுத்த கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் அணி தவறவிட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்ட இருவருமே முதல் விக்கெட்டுக்கு சதம் அடித்து அசத்தினர்.

இருவருமே அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில், அணியின் ஸ்கோர் 10.2 ஓவர்களில் 138 ரன்களை கடந்தபோது சுனில் நரைன் ஆட்டமிழந்தார். 32 பந்துகளை சந்தித்த அவர், 9 பவுண்டரி 4 சிக்சருடன் 71 ரன்கள் குவித்து அசத்தினார். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிளிப் சால்ட் 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 75 ரன்கள் குவித்து வெளியேறினர்.

அடுத்து வந்த ரஸல் தனது பங்குக்கு 12 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 24 ரன்கள் குவித்து வெளியேறிய நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் 10 பந்துகளில் 28 (1 பவுண்டரி 3 சிக்சர்) ரன்களும், ரின்கு சிங் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 7-வது விக்கெட்டுக்கு இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ரமன்தீப் முதல் பந்தில் சிக்சர் அடித்த நிலையில், கடைசி பந்தில் வெங்கடேஷ் அய்யர் ரன் அவுட் ஆனார். 23 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 39 ரன்கள் குவித்தார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும், சாம் கரன், ஹர்ஷெல் பட்டேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடந்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், அணியின் ஸ்கோர் 6 ஓவர்களில் 93 ரன்களை எட்டியபோது பிரப்சிம்ரன் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

20 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 54 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய ரிலி ரோஸோ தனது பங்குக்கு 16 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷஷாங் சிங் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். 15 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 30 பந்துகளில் 61 ரன்கள் தேவை என்ற நிலையில், பேர்ஸ்டோ 42 பந்துகளில் 8 பவுண்டரி 8 சிக்சருடன் 97 ரன்களும், ஷஷாங் 12 பந்துகளில் 2 சிக்சருடன் 19 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் அதிரடியால் இறங்கிய ஷஷாங் சிங் 22 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில்,  18.4 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்து சாதனை வெற்றியை பதிவு செய்தது. அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த ஷஷாங் சிங் 28 பந்துகளில் 8 சிக்சர் 2 பவுண்டரியுடன் 68 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 48 பந்துகளில் 8 பவுண்டரி 9 சிக்சருடன் 108 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Punjab Kings Kolkata Knight Riders IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment