Advertisment

IND VS WI, 1st T20 Highlights: திலக் வர்மா அதிரடி வீண் : இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs Wi

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20

India vs West Indies 1st T20I live score in Tamil: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.

Advertisment

இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், ஜான்சன் சார்லஸ் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், சற்று அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 19 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் குவித்து வெளியேறினார்.

58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 4-வது விக்கெட்டுக்கு இணைந்த பூரன்- பாவெல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவான ஸ்கோரை நோக்கி சென்றுகோண்டிருந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய பூரன் 34 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 41 ரன்களும், பாவெல் 33 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில், சாஹல், அர்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும், பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடந்து 150 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடகக் வீரர் இஷான் கிஷன் 6 ரன்களிலும்,  சுப்மான் கில் 3 ரன்களிலும் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 21 பந்துகளில் 21 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து சாம்சன் 12, அக்சர் 13, குல்தீப் 3, அர்ஷ்தீப் 12 என அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2-வது போட்டி ஆகஸ்ட் 6-ந் தேதி நடைபெறுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment