Advertisment

இலங்கை 3 விக்கெட்டை இழந்து பரிதவிப்பு : 379 ரன்கள் பின் தங்கியுள்ளது

இந்தியா இலைங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று விராட் கோலி அரை சதம் அடித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kohli

India's captain Virat Kohli plays a shot during the fourth day of their third test cricket match against Sri Lanka in New Delhi, India, Tuesday, Dec. 5, 2017. (AP Photo/Altaf Qadri)

இந்தியா இலைங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று விராட் கோலி அரை சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 395 ரன்கள் முன்னணியில் உள்ளது.

Advertisment

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மூன்றாவது போட்டி டெல்லியில் நடக்கிறது. முதல் இன்னிங்க்சில் இந்தியா 536 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்க்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய இந்திய 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களுடன் ஆடி வருகிறது. முதல் இன்னிங்க்சில் இரட்டை சதம் அடித்த இந்த கேப்டன் விராட் கோலி, இரண்டாவது இன்னிங்க்சில் அரை சதம் அடித்து அவுட்டானார்.

இந்திய அணியின் வீரரான ரோஹித் சர்மா, 44 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணி 246 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இன்னமும் 379 ரன்கள் எடுக்க வேண்டியதுள்ளது.

ஆட்டம் இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment