இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டி20 ரத்து!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. எனவே இப்போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையல், நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதனால், ஒருநாள் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி20 தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்ற நோக்கில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. இதனையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், விளையாடிய ஆஸ்திரலிய அணி தோல்வியையே தழுவியது. 2-வது போட்டியில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஆஸ்திரேலியா இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது.

இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

×Close
×Close