இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர்: கோப்பையை வெல்லப்போவது யார் ? ஹைதராபாத்தில் இன்று கடைசி போட்டி!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையல், நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதனால், ஒருநாள் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி20 தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்ற நோக்கில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.

இதனையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், விளையாடிய ஆஸ்திரலிய அணி தோல்வியையே தழுவியது. 2-வது போட்டியில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஆஸ்திரேலியா இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது. இந்த நிலையில், டி20 கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

ஒருநாள் போட்டித் தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலியா, டி20 தொடரை கைப்பற்ற கடுமையாக மல்லுக்கட்டும். அதே நேரத்தில், 2-வது போட்டியில் மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து, டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்கவுள்ளது. எனவே, இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா… 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது

×Close
×Close