Advertisment

இந்தியா vs இங்கிலாந்து தொடர் அட்டவணை! கேப்டன் கோலிக்கு காத்திருக்கும் செமயான சவால்!

ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் இத்தொடரில் இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிராக மூன்று டி20, மூன்று ஒருநாள், மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா vs இங்கிலாந்து தொடர் அட்டவணை! கேப்டன் கோலிக்கு காத்திருக்கும் செமயான சவால்!

அடுத்த ஆண்டு (2018) இங்கிலாந்தில் அந்நாட்டிற்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

Advertisment

2018 ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் இத்தொடரில் இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிராக மூன்று டி20, மூன்று ஒருநாள், மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

பழைய டிராஃபோர்டில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகள் கார்டிஃப் மற்றும் பிரிஸ்டோல் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த நீண்ட பயணத்தில் முதலில் டி20 போட்டிகள் தான் நடைபெறுகிறது.

அடுத்ததாக ஜூலை 12-ஆம் தேதி டிரென்ட் பிரிட்ஜில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்சில் ஜூலை 14-ஆம் தேதியும், ஹெட்டிங்லேவில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.

பின், எட்ஜ்பாஸ்டன் நகரில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளும் முறையே லார்ட்ஸ், டிரென்ட் பிரிட்ஜ், ஏக்ஸ் பவுல் மற்றும் கியா ஓவல் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதற்கு முன் கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த தோனி தலைமையிலான இந்திய அணி 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக உள்ள விராட் கோலிக்கு இத்தொடர் உண்மையிலேயே மிகவும் கடினமானதாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் ஆசிய கண்டத்திலேயே விளையாடும் இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கையில் பெரும்பாலும் தோல்வியைத் தான் தழுவுகின்றது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் கோப்பைகளை இந்திய கேப்டன்களால் அந்த நாடுகளில் முத்தமிட முடிவதில்லை. இதனை விராட் தலைமையிலான படை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியா - இங்கிலாந்து தொடர் முழு அட்டவணை:-

3 July – 1st IT20, Emirates Old Trafford (5.30pm)

6 July – 2nd IT20, The SSE SWALEC, Cardiff (5.30pm)

8 July – 3rd IT20, The Brightside Ground, Bristol (2pm)

ஒருநாள் தொடர்

12 July – 1st ODI, Trent Bridge (12.30pm)

14 July – 2nd ODI, Lord’s (11am)

17 July – 3rd ODI, Emerald Headingley (12.30pm)

டெஸ்ட் தொடர்

1-5 August – 1st Test, Edgbaston

9-13 August – 2nd Test, Lord’s

18-22 August – 3rd Test, Trent Bridge

30 August-3 September – 4th Test, Ageas Bowl

7-11 September – 5th Test, Kia Oval

Virat Kohli India Vs England Bcci Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment