Advertisment

Ind Vs SA 2nd TEST 3nd DAY LIVE SCORE : கேப்டன் விரட் கோலி சதம் அடித்து சாதனை

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று இந்தியா கடுமையாக போராட வேண்டிய சூழலில் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AP1_14_2018_000179B

Pretoria: India's captain Virat Kohli raises his bat after reaching half century during the second day of the second cricket test match between South Africa and India at Centurion Park in Pretoria, South Africa, Sunday, Jan. 14, 2018. AP/PTI(AP1_14_2018_000179B)

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று இந்தியா கடுமையாக போராட வேண்டிய சூழலில் இருக்கிறது. கேப்டன் கோலி சதம் அடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

விரட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 335 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 183 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விரட் கோலி 85 ரன்களுடனும், ஹிர்திக் பாண்டியா 11 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். இலக்கை எட்ட இந்தியாவுக்கு 152 ரன்கள் தேவை. கோலி, ஹிர்திக் பாண்டியா ஜோடி ஆட்டம் இழக்கமால் ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட ஆரம்பித்தனர். கேப்டன் விரட் கோலி சதம் அடித்தார். இது அவருடைய 21வது டெஸ்ட் சதமாகும். அடுத்த சில ஓவர்களில் ஹிர்திக் பாண்டியா அவுட்டானார். அதன் பின்னர் அஸ்வின், கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொருமையாக விளையாடி வருகின்றனர்.

மூன்றாவது நாள் ஆட்டத்தின் லைவ் ஸ்கோரை தெரிந்து கொள்ள ஐஇதமிழ் டாட் காமோடு இணைந்திருங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment