Advertisment

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்... ஒருநாள் தரவரிசையில் முதலிடம் யாருக்கு?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் தலா 117 புள்ளிகளுடன் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Australia

சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியியை டெஸ்ட். ஒருநாள், டி20 தொடரில் வாஷ்-அவுட் செய்தது. 5-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 5-0 என்ற கணக்கிலும், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்று அசத்தியது.

Advertisment

Virat Kohli, India vs Srilanka

இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி சென்னையில் தொடங்குகிறது. 2-வது ஒருநாள்போட்டி 21-ம் தேதி கொல்கத்தாவிலும். 3-வது போட்டி 24-ம் தேதி இந்தூரிலும், 4-வது போட்டி பெங்களூருவிலும்  5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 1-ம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 7-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி ராஞ்சியில் 7-ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி 10-தேதி கவுகாத்தியிலும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது.

தற்போதைய நிலையில், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் 110 புள்ளிகளுடன் தென்ஆப்ரிக்கா, 3-வது இடத்தில் 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேயியாஅணிகள் தலா 97 புள்ளிகளுடன் 4-வது மற்றும் 5-வது இடத்தில் உள்ளது.

இதேபோல, ஒருநாள் போட்டி தரவரிசிசையில், தென் ஆப்ரிக்க அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா 117 புள்ளிகளுடன் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி 111-புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில், இந்திய-ஆஸ்திரேலிய அணிகளிடையே 5-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணி 3-க்கு 2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் 2-வது இடத்திற்கு முன்னேறும். ஆனால், 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றால் 120 புள்ளிகளுன் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.அதேநேரத்தில், 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றால் கூடுதல் புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும்.

5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை இழந்தால் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு பின் சென்று விடும். ஆகவே, இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றாலே ஒருநாள் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

Sri Lanka v India - Fifth One Day International Match

இதேபேல தான ஆஸ்திரேலிய அணியும் 4-1 என்ற கணக்கில் கைப்பறினால் அந்த அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறும். 5-1 என்ற கணக்கில் அந்த அணி தொடரை கைப்பற்றினால், 122-புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும்.

டி20 தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் 5-வது இடத்திலேயே உள்ளது. டி20 தரவரிசையில் நியூசிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் 123 புள்ளிகளுடன் இங்கிலாந்தும், 3-வது இடத்தில் 121-புள்ளிகளுடன் பாகிஸ்தானும், 4-வது இடத்தில் 117 புள்ளிகளுடம் மேற்கிந்திய தீவுகள் அணியும் உள்ளது. ஆஸ்திரேயில அணி 110 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

ஒருவேளை இந்த டி20 தொடரில் 3-போட்டிகளிலும் இந்திய அணி வெல்லும்பட்சத்தில், 122 புள்ளிகடன் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும். ஆனால், ஆஸ்திரேலிய அணி 102 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு பின் செல்லும்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெறும் முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விபரம் பின்வருமாறு:

முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ கடந்த 10-ம் தேதி வெளியிட்டது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா(துணை கேப்டன்), எம்.எஸ் டோனி, ஷிகர் தவான், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரஹானே, லோகேஷ் ராகுல், புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, யுவேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்ற சர்துல் தாகூர் நீக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Bcci Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment